சென்னை சோழிங்கநல்லூர் எல்காட் வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவன அலுவலகங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது பின்னர் புரளி எனத் தெரிய வந்தது.
சென்னை சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் பிரதான சாலையில் எல்காட் சிறப்பு மென்பொருள் பொருளாதார வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில் இந்த வளாகத்தில் உள்ள அலுவலகங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக ஒரு இமெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் எல்காட் வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக வெடிக்கும் என்றும் முடிந்தால் அனைவரும் தப்பித்துவிடுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
சென்னை.. பிரபல சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் #chennai pic.twitter.com/zkag1sAsYP
— Oneindia Tamil (@thatsTamil) January 30, 2019
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செம்மஞ்சேரி போலீசாரை உஷார்படுத்தி வெடிகுண்டு நிபுணர்களை சம்பவ இடத்திற்கு வரவைத்து மூன்று மணி நேரம் சோதனையிட்டனர்.

சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு ஏதும் இல்லை. இது புரளி என உறுதிபடுத்தியதை அடுத்து செம்மஞ்சேரி போலீசார் மெயில் அனுப்பிய நபர் யார் என்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications