தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் - மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன் மீது பாய்ந்தது வழக்கு!
வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கர்னல் பாண்டியன் மீது வழக்கு பாய்ந்தது.
சென்னை: தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பாபு, தகராறு ஒன்றில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் ஒருவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகராறு ஒன்றில் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் பாஜக சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கர்னல் பாண்டியன், இராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள்; வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள்; இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் வெடிகுண்டு வைப்போம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் கெட்டுவிடும். இதனை பகிரங்கமாக தெரிவிக்கிறோம் என்றார்.
பாஜக கர்னல் பாண்டியனின் இந்த் பேச்சுக்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதும், ஆமாம் நாங்கள் குண்டு வைப்போம். மிரட்டதான் விடுக்கிறோம். சட்டம் ஒழுங்கு கெட்டுத்தான் போகும் என மீண்டு கர்னல் பாண்டியன் ஆவேசமாக கூறினார். கர்னல் பாண்டியன் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வன்முறையை தூண்டும் வகையில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவோம் என்கிற வகையில் வெடிகுண்டு வைப்போம் என பேசிய கர்னல் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழகத்தை வன்முறைக் களமாக்க, சமூக அமைதியைக் கெடுக்க,தொழில் முதலீடுகளைத் தடுக்க நண்பர் அண்ணாமலை செய்யும் மக்கள் விரோத அரசியலின் ஒரு கருவிதான் இந்த முன்னாள்ராணுவ நபர். முள்மரத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தேசப்பதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து கர்னல் பாண்டியனை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யக் கூடும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications