ஆகாசா ஏர் விமானம் வெடித்துச் சிதறும்.. மர்ம நபரின் மிரட்டலால் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆகாசா நிறுவனத்தின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆகாசா விமான போக்குவரத்து சேவையைத் தொடங்கினார். தொடங்கப்பட்டதில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்த ஆகாசா ஏர் விமான சேவை கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் இருந்து வருகிறது.

நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு நிர்வாக காரணங்களால் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தியது ஆகாசா ஏர். இதையடுத்து, ஆகாசா நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள், பன்னாட்டு விமான நிலையங்களின் ஹேங்கர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஒரு விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எக்ஸ் (ட்விட்டர்) சமூகவலைதளத்தில் ஆகாசா விமான நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்ட மர்ம நபர் ஒருவர், ஆகாசா விமானம் வெடித்து சிதறும் என மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆகாசா ஏர் விமானத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஆகாசா ஏர் விமானத்தையும், விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியோடு சோதனை செய்தனர். இந்த ஆய்வில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications