தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் கோடம்பாக்கம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ் வயது 21 என்பது தெரியவந்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள திரைப்பட நடிகர் விஜயகாந்த் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷ் இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சரியாக மதியம் 12:56 மணிக்கு அழைப்பு வந்தது.

இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜயகாந்த் இல்லத்தில் ப்ளோரா என்ற பெண் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில் மிரட்டல் விடுத்ததில் அது புரளி என தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ் (21) என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் நடிகர் சூர்யா அலுவலகம், நடிகர் ரஜினி, பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் விழுப்புரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதே நேரத்தில் பெற்றோரிடம் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும். இந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தமிழகம் முழுவதும் இதுபோல செய்து வருவது வேதனையின் உச்சம் என அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications