ஸ்டாலின், த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பாஜக அலுவலகத்திற்கும் வந்த இமெயில்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லம், நடிகை த்ரிஷாவின் தேனாம்பேட்டை வீடு, திநகர் பாஜக தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவர்களது வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது. அது போல் ஆளுநர் மாளிகை, எஸ்.வி.சேகரின் வீடுகளுக்கும் மிரட்டல் வந்ததாக சொல்லப்படுகிறது.

யார் மிரட்டினார்கள், எதற்காக இந்த இமெயில் என்பது குறித்து தெரியவில்லை. அண்மைக்காலமாக அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த இமெயில் முகவரியும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஆயினும் அதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சென்னையில், நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் மற்றும் தமிழ் வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜயின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலுக்குப் பின்னர், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று, முழுமையான சோதனைகள் நடத்தினர். இவ்வாறு நடந்த மிரட்டல், கரூர் மாவட்டத்தில் விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு பிறகு இந்த மிரட்டல் ஏற்பட்டது.
சென்னையில், மந்தைவெளி பகுதியில் உள்ள நடிகர் மற்றும் பாஜக முன்னணி எஸ்.வி. சேகரின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல், கடந்த வாரத்தில் நடந்த மிரட்டலின் தொடர்ச்சியாக இருந்தது. முன்னதாக, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி, மிரட்டல் பொய்யானது என கண்டறிந்தனர்.
-
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!










Click it and Unblock the Notifications