பத்திரப்பதிவு.. சொத்து பத்திரம் பதியணுமா? ஆடி 18 வேற வருதே.. என்ட்ரி தந்த "பெயிரா".. இது சாத்தியமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் ஆடிப்பெருக்கு சுபதினம் வரவுள்ள நிலையில், தமிழக அரசுக்கு பெயிரா முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது.. அது என்ன?

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் புதிதாக ஒரு வீடு, நிலம் வாங்கும்போதும்சரி, அதற்கான பத்திர பதிவு செய்யும்போதும்சரி, நல்ல நேரம், சுபமுகூர்த்த நாட்களை பார்ப்பது வழக்கமாக உள்ளது. முக்கியமாக, சுபமுகூர்த்தை எதிர்நோக்கி, பத்திரப்பதிவு கூட செய்யாமல் காத்திருக்கவும் செய்கிறார்கள்.

Registration Department Bond Registration 18

பத்திரப்பதிவு: இதுபோன்ற சுபமுகூர்த்த தினத்தில் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் பத்திரப்பதிவு செய்ய முயலும்போது கூட்ட நெரிசல் ஏற்படுவதுண்டு.. இதனால், சிலசமயம் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் போகும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.. இந்த நடைமுறை சிக்கலை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

10 நாட்களுக்கு முன்புகூட, ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளாகும். இந்த நாளிலும் டோக்கன்கள் அதிகமாகவே விற்கப்பட்டன.. தமிழக அரசுக்கு இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் அதிக வருவாயும் அன்றைய தினம் கிடைத்திருந்தது.. அதாவது ஒரேநாளில் ரூ.224.26 கோடி பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு வருவாயாக கிடைத்தது.

ஆடி மாதம்: தற்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கிறது.. விரைவில் ஆடிப்பெருக்கும் வரப்போகிறது.. இந்த சுபதினத்தை முன்னிட்டு பதிவுத்துறைக்கு பெயிரா கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது. அதில் முக்கியமான கோரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருக்கு எழுதியிருக்கும் கடிதம் இதுதான்:

"தமிழகத்தில் எதிர்வரும் 2024, ஆகஸ்ட் 03 சனிக்கிழமை) ஆடிப் பெருக்கு, தினத்தன்று எந்த ஒரு சுப காரியத்தையோ, தொழிலையோ, வழிபாட்டினையோ துவங்கினால் அதன் பலன் பல மடங்காக பெருகிக் கொண்டே இருக்கும் என்பது தமிழகத்தில் வசிக்கும் பெருமக்களின் நம்பிக்கை. இது பெருக்கத்திற்குரிய நாள் என்பதால் சுப காரியங்கள் பலவும் இந்த நாளில் துவங்கப்படுகிறது.
ஆடிப்பெருக்கு: ஆகவே தமிழக மக்களின் பெரும் நம்பிக்கை தினமான பெருக்கத்திற்குரிய ஆடிப்பெருக்கினை முன்னிட்டு, ஆடி 18 சுபதினத்தில் சொத்துக்களை பதிவு செய்ய விரும்பும் பொது மக்களுக்கு உதவிடும் வகையில், ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பதிவு அலுவலகங்களுக்கு அன்று வேலை நாளாக அறிவித்தும், மேலும் இந்த சுப தினத்தில் பதிவு பணியை மேற்கொள்ள வருகை தரும்

பொதுமக்களுக்கு எந்த விதமான வீண் சிரமமுமின்றி தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன்கள் கிடைத்திடும் வகையில், முன்பதிவு டோக்கன்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தி, பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்" என்று பதிவுத்துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

எதிர்பார்ப்பு: ஆடிப்பெருக்கு தினம் வேலை நாளாக அறிவிக்கப்படுமா முன்பதிவு டோக்கன்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? என்று தெரியவில்லை.. ஆனால், பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, பெயிரா முன்னெடுத்து வரும் ஒவ்வொரு செயல்பாடுகளும் பெருத்த கவனத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+