ஸ்ரீதேவி சொத்து.. சென்னை ஈசிஆரில் 37 வருடம் கழித்து வில்லங்கம்.. தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சொத்தை, சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடமிருந்து ஸ்ரீதேவி விலைக்கு வாங்கியிருந்தார். இந்நிலையில் 37 வருடங்களுகு பிறகு சம்பந்த முதலியாரின் வாரிசுகள் என்று சொல்லி மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று உரிமை கோருகிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், போனிகபூர் கொடுத்த புகாரை தாம்பரம் தாசில்தார் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வாரிசு சான்றிதழ் மூலம் எந்த சொத்துக்கும், யார் வேண்டுமானாலும் வில்லங்கத்தை உருவாக்க முடியும் என்கிற நிலை உள்ளது. சிலர் உண்மையிலேயே தாங்கள் தான் வாரிசு என்றும், தவறாக ஏமாற்றிவிற்கப்பட்டதாக வழக்கு போட முடியும். அதேபோல் ஒருவர் திடீரென தான் தான் வாரிசு என்று, வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தின் உரிமையை கேட்டு வழக்கு தொடர முடியும். அப்படி ஒரு சிக்கல் தான் ஸ்ரீதேவி சொத்துக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பற்றி பார்ப்போம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எனது மனைவி ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சொத்தை, சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.
அந்த சொத்தை நாங்கள் கடந்த 37 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். இந்தநிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் வாரிசுகள் எனக்கூறிக்கொண்டு 3 பேர் மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் திடீரென எங்களது சொத்துக்கு உரிமை கோரி வருகின்றனர். இந்த வாரிசு சான்றிதழ் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மோசடியாக பெறப்பட்டிருந்தது. இந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யக்கோரி நாங்கள் அளித்த மனுவை தாம்பரம் அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது போனி கபூர் அளித்துள்ள மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தங்களது சொத்துக்கு சிலர் மோசடியான வாரிசு சான்றிதழ் மூலமாக உரிமை கோருவதாக போனி கபூர் அளித்துள்ள மனுவை விசாரித்து 4 வார காலத்தி்ல் தாம்பரம் தாசில்தார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications