சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் நடக்க போகும் தரமான சம்பவம்.. இனி படிக்கவும் போலாம்.. வேற லெவல் பிளான்
சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக புத்தக பூங்கா அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த புத்தக பூங்காவில், 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும் என்றும், தமிழ், ஆங்கில புத்தகங்கள் இந்த பூங்காவில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. துவக்கத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கு போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது மெட்ரோ ரயில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

மெட்ரோ ரயில்: பீக் நேரங்களில் புறநகர் ரயில்களை மிஞ்சும் அளவுக்கு பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது மெட்ரோ ரயில் சேவையானது நீலம், பச்சை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. பிங்க் வழித்தட பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் கோயம்பேடு - ஆலந்தூர் மெட்ரோ வழி தடமும், 2016 ஆம் ஆண்டு சின்னமலை முதல் விமான நிலைய வழித்தடமும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.
சென்ட்ரல் மெட்ரோ நிலையம்: பின்னர் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவையானது நீட்டிக்கப்பட்டு தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என இரண்டு வழித்தடங்களில் சுமார் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாதவரம் - சோளிங்கநல்லூர்- சிறுசேரி சிப்காட் - பூந்தமல்லி - லைட் ஹவுஸ் என இரண்டாம் கட்டம் திட்டமும் செயல்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் சேவையை தவிர பயணிகளை கவரும் விதமாகவும் வருவாயை பெருக்கும் விதமாகவும் பல்வேறு முயற்சிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முக்கிய ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்கள், புட் கோர்ட்டுகள் உள்ளிட்டவற்றையும் அமைக்க மெட்ரோ ஆலோசித்து வருகிறது. சென்னையில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் என்பது மிக முக்கியமான இடமாக உள்ளது.
புத்தக பூங்கா: தினமும் ஆயிரக்கணகான பயணிகளில் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தரைக்கு அடியில் சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. சென்ட்ரல் மட்டும் இன்றி ஆலந்தூர், விமான நிலையம், திருமங்கலம், பரங்கிமலை உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது. இந்த நிலையில் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகள் வசதிக்காக புத்தக பூங்கா விரைவில் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் விளக்கம்: இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:- சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தக பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. தமிழ், ஆங்கில புத்தகங்கள் அடங்கிய புத்தக பூங்கா அமைக்கப்படும். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் புத்தகத்தை எடுத்து படிக்க முடியும். புத்தக பூங்காவில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும்.
புத்தக பூங்கா எப்படி?: இங்கு வருபவர்கள் அமர்ந்து புத்தகங்கள் படிக்க வசதியான சேர்களும் போடப்படும். புத்தகங்களை காட்சிப்படுத்தவும் விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. பயணிகள் கொடுக்கும் வரவேற்பை பொருத்து ஏஜி - டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும்.
புத்தகங்களை வாங்குவதற்கு தனியாக கவுன்டர் அமைக்கப்படும். டிக்கெட் கவுன்டர் அருகிலோ அல்லது புட் கோர்ட் அருகிலோ இந்த கவுன்டர் அமைக்கப்படும். தமிழ்நாடு பாடநூல்கள் மற்றும் கல்வி சேவைகள் கழகம் மூலமாக இந்த புத்தக பூங்கா அமைக்கப்படும்" என்று கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications