இனி ரயில் டிக்கெட் முன்பதிவு ரொம்ப ஈஸி.. யுடிஎஸ் செயலியில் வந்தது அதிரடி மாற்றம்.. பயணிகள் ஹேப்பி
சென்னை: யுடிஎஸ் செயலி மூலம் ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கும் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் வீடு உள்பட எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து கொள்ள முடியும்.
பொதுமக்கள் சிரமமின்றி டிக்கெட் முன்பதிவு செய்ய பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் யுடிஎஸ் செயலி (Unresearved Ticketing System or UTS App) உள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டை பெற முடியும்.
இதன்மூலம் டிக்கெட் கவுண்ட்டருக்கு பொதுமக்கள் சென்று வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் இந்த செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பொதுமக்களுக்கு முக்கிய கட்டுப்பாடு ஒன்று இருந்தது. அந்த கட்டுப்பாட்டின் பெயர் தான் ‛ஜியோ ஃபென்சிங்'.
அதாவது இந்த செயலில் லொகேஷன் அடிப்படையில் செயல்படக்கூடாது. இதனால்‛ஜியோ ஃபென்சிங்' கட்டுப்பாட்டின்படி இந்த செயலியை பொதுமக்கள் பயன்படுத்தினாலும் கூட ஒருவர் டிக்கெட் எடுக்கவேண்டும் என்றால், புறநகர் ரயில் என்றால் ரயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவுக்குள்ளும், பிற ரயில்கள் என்றால் 50 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளும் இருந்தால் மட்டுமே நாம் செல்லும் ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவில்லாத டிக்கெட்டை எடுக்க முடியும்.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் ‛ஜியோ ஃபென்சிங்' கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது ‛ஜியோ ஃபென்சிங்' கட்டுப்பாடு என்பது யுடிஎஸ் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட்டை யுடிஎஸ் செயலி மூலம் எடுத்து கொள்ள முடியும்.
அதாவது குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து தான் யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட ஒருவர் யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் ரயில் நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications