கர்நாடகாவில் யார் ஜெயிச்சா என்ன..காவிரி விவகாரத்தில் நமக்கு எதிராகவே இருப்பாங்க.. விளாசிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி சீமான் கூறியதாவது:-
கர்நாடகாவில் இரண்டு கட்சிகளும் தான் மாறி மாறி வருகின்றன. 5 ஆண்டு கால ஆட்சி ஒரு மாறுதல் வேண்டும் என மக்கள் நினைச்சிருக்கலாம். எங்களை பொறுத்தவரை இரண்டு கட்சியின் வெற்றியும் ஒன்னுதான்..நமக்கு எந்த நன்மையும் கொடுக்கப்போவது இல்லை. இந்திய கட்சி, தேசிய கட்சி என்று சொல்வார்களே தவிர கர்நாடகா என்று வரும் போது மாநில கட்சியாகத்தான் இருப்பாங்க.. அந்த மாநில நலனைத்தான் பேசுவார்கள். அதனால், ஒரு மாற்று என நினைத்து காங்கிரசை தேர்வு பண்ணி இருக்கலாம்.
இரண்டு பேருமே காவிரி நதி நீர் விவகாரத்தில் நமக்கு எதிராக இருப்பார்கள். மேகதாது அணையை இரண்டு பேருமே கட்டியே தீருவோம் என்பார்கள். அவர்களும் நிதி நிலை அறிக்கையில் 9 ஆயிரம் கோடி ஒதுக்குவோம் என்றிருக்கிறார்கள். இவர்களும் ஒதுக்குவோம் என்று இருக்கிறார்கள். வெற்றி தோல்வி... நமக்கு என்ன இருக்கும் ஒன்னும் இல்லை.
திமுக அமைச்சரவையில் இலாகா மாற்றுவது எல்லாம் அவர்கள் விருப்பம். அவர்கள் எந்த காயை எங்கே நகர்த்தி விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்களே அப்படி விளையாடுகிறார்கள். இதில் நான் என்ன கருத்து சொல்ல முடியும். திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சி அவர்கள் சொல்வது போலத்தான் இருக்கிறது. இதுபோல கேவலமான் ஆட்சியை இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாது. எனவே ஈடு இணையில்லா ஆட்சிதான்.
பிடிஆர் நேர்மையானவர். வாக்குக்கு காசு கொடுக்காமல் வென்றவர் பிடிஆர். அவருக்கு குடும்ப பின்னணி இருக்கிறது. நீண்ட தொரு அரசியல் பாரம்பரியம் உள்ளது. பிடிஆர் சொல்லித்தான் வெளியில் தெரியவந்தது என்று சொல்வது எல்லாம் பயித்திகாரத்தனம். எல்லாருக்கும் தெரியும். தெரியாததை ஒன்றும் அவர் பேசவில்லை. அதனால்தான் நடவடிக்கை எடுத்ததாக நான் பார்க்கவில்லை. ஏதோ வெளியில் வந்து விட்டது அதனால் மாற்றி விடுவோம் என மாற்ற்றியிருக்கிறார்கள்.
செல்லூர் ராஜூ சொல்வதற்காகத்தான் விஜய் அரசியலுக்கு வரப்போவது இல்லை. விஜய் அரசியலுக்கு விரும்பி வருகிறார். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார். அதனால் வருகிறார். கமல்ஹாசன் வரும் போது எப்படி வாழ்த்தினோமோ அதுபோல விஜய் வரும் போதும் வாழ்த்துவோம். வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications