அரசு பஸ்சில் டிக்கெட் செக்கிங் செய்த சிறுவன்! ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் ஏடா கூடமாக பதில் சொன்ன கண்டக்டர்
சென்னை: அரசு பேருந்து பயணிகளிடம் டிக்கெட் செக்கிங் பணியில் டீ ஷர்ட் அணிந்தபடி சிறுவன் ஒருவர் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. இது பற்றி பயணி ஒருவர், டிக்கெட் செக்கிங்கில் ஈடுபடும் சிறுவனிடம் கேட்ட போது அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. அருகில் இருந்த கண்டக்டரும் சரியான பதிலளிக்காமல் அலட்சியம் செய்துள்ளார்.
அரசு பேருந்துகளில் பயணிகள் டிக்கெட் எடுத்து பயணிப்பதை உறுதி செய்வதற்காக ஆங்காங்கே திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபடுவதை பார்த்து இருக்க முடியும். சென்னை போன்ற நகரங்களில் எந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறார்கள் என்று கணிக்க முடியாத அளவு திடீரெனெ பேருந்தில் ஏறி அனைத்து பயணிகளிடம் டிக்கெட் வாங்கி செக் செய்வார்கள்.

டிக்கெட் செக்கிங் பணியில் சிறுவன்
தொலை தூர பேருந்துகளில் கூட இரவு நேரத்தில் முக்கியமான பாயிண்ட்களில் இப்படி டிக்கெட் சோதனையில் டிக்கெட் பரிசோதர்கள் ஈடுபட்டு இருப்பார்கள். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் சீனியர்களுக்கு இந்த டிக்கெட் பரிசோதகர் பணி ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் பயணிகளிடம் சுமார் சிறுவன் ஒருவர் டிக்கெட் செக்கிங்கில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஏடா கூடமாக பதிலளித்த கண்டக்டர்
பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகளிடம் வரிசையாக டிக்கெட்டை கேட்டு, டிக்கெட் செக்கிங் பணியில் அந்த சிறுவன் ஈடுபட்டுகொண்டு இருந்தார். இதைக் கவனித்த பயணி ஒருவர், நீங்கள் ஏன் டிக்கெட் செக் செய்கிறீர்களே? யார் நீங்க? என்று சிறுவனிடம் கேட்க.. அதற்கு நீங்க ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க என்று சிறுவன் பதிலளித்தார்.
அப்போது பக்கத்தில் நின்ற அரசுபஸ் கண்டக்டரோ, இவர் எனக்கும் மேல் உள்ள பெரிய அதிகாரி.. ஏஇ என்று பயணியிடம் ஏடா கூடமாக பதிலளித்தார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
நெட்டிசன்கள் சரமாரி கேள்வி
தனியார் பேருந்துககளுக்கு செக்கிங் செய்தால் கூட அந்த பேருந்து சார்பாக ஒருவேளை பணியில் ஈடுபட்டு இருப்பார் என கருதலாம். ஆனால் அரசு பேருந்துகளில் டிக்கெட் செக்கிங் செய்யும் பணிக்கு இந்த சிறுவனுக்கு யார் பணி ஒதுக்கீடு செய்து கொடுத்தது? ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என்றெல்லாம் கேட்டு நெட்டிசன்கள் போக்குவரத்துதுறை அமைச்சர் மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்துடன் தொடர்புடைய எக்ஸ் பக்கத்தை டேக் செய்து பதிவிட்டு இருந்தனர்.
அரசு போக்குவரத்து கழகம் விளக்கம்
இந்தநிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்த நிகழ்வு ஆத்தூர் பேருந்து நிலையத்தில் 14.07.2025 அன்று நடைபெற்றது இந்த கணொளியில் இருப்பவர் தொழில் பழகுநர் பயிற்சியில் இருப்பவர் ஆவார்.
தொழிற்பயிற்சி பழகுநர்
இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரை இப்பணியில் ஈடுபடுத்திய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவ்டிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்து போக்குவரத்து கழகங்களில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களில் சேர்க்கப்படுவது பழக்கம். இப்படியாக தொழிற்பயிற்சி பழகுநராக சேர்ந்த நபரையே டிக்கெட் செக்கிங்கு ஈடுபடுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications