பிரபல ஓட்டலில் மாணவனுக்கு மாத்திரை பால்.. ஆசனவாயில் தொற்று.. இவர்களெல்லாம் டீச்சர்களா? தீர்வு என்ன?
சென்னை: பிரபல தனியார் பள்ளியின் 40 வயது ஆசிரியர் ஒருவர், தன்னுடைய 16 வயது மாணவனை பலாத்காரம் செய்துள்ளார்... கடந்த 2023ம் ஆண்டிலிருந்தே இந்த கொடுமை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.. தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி, பெரும் அதிர்ச்சியை தந்து வருகின்றன..
2 மாதத்துக்கு முன்பு, சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் இதுவாகும்.. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனுக்கு திடீரென 1 மாத காலமாகவே, உடம்பு சரியில்லாமல் இருந்துள்ளது.

அசோக்நகர் மாணவன் நினைவிருக்கா
ஒருகட்டத்தில் மாணவனுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆசனவாயில் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றது. அப்போதுதான், மாணவனிடம் என்ன நடந்து என்று பெற்றோர் விசாரித்திருக்கிறார்கள்..
பள்ளியில் தமிழ் ஆசிரியர் சுதாகர், பாலியல் தொந்தரவு தந்ததும், இதன்காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் தெரியவந்தது.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட தமிழ் ஆசிரியர் மீது புகார் தந்தனர்.. ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியிருக்கிறது.
பிறகு பெற்றோர் , குமரன் நகர் போலீசில் புகார் தந்தனர்.. அப்போதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதற்கு பிறகே ஒட்டுமொத்த பேரும் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தியதில், இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது..
ஆசனவாய் தொற்று
அந்த மாணவனுக்கு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகவும், பெற்றோர் கண்ணீர் மல்க கூறினார்கள்.. பிறப்புறுப்பு ஆசனவாய் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில் செய்த ஆசிரியர் மீது ஒரு நடவடிக்கையும் கிடையாதா? என்று வேதனையுடன் சொன்னார்கள்.. இறுதியில்தான் ஆசிரியர் சுதாகர் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்10-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கும் இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.. அந்த பள்ளியின் ஹாஸ்டல் வார்டன் கவியரசன் (23) பாலியல் தொல்லை தந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவனின் அம்மா, அழுதுகொண்டே கமுதி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்திருந்தார்..
பரபரப்பு வாக்குமூலம்
மாணவனுக்கு மேற்கண்ட ஆசிரியர்களால் மட்டுமல்ல, சில ஆசிரியைகளாலும் பாலியல் சித்ரவதைகள் தரப்பட்டு வருகின்றன.. இதோ மும்பையில் நேற்று ஒரு கொடுமை நடந்துள்ளது.. இதுகுறித்து அந்த ஆசிரியையே போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்..
அதில், "நான் பிரபல தனியார் பள்ளியின் ஆங்கில ஆசிரியை, 2023-ல் பள்ளி ஆண்டு விழாவுக்கு, மாணவர்களுக்கு டான்ஸ் டிரெயினிங் தந்தபோதுதான், 11ம் வகுப்பு மாணவனிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. 2024 ஜனவரியில் மாணவனிடம் நெருங்க தொடங்கினேன்.
ஆனால், மாணவன் அதை விரும்பாமல் தவிர்த்தான்.. பிறகு தோழியின் உதவி மூலம் மாணவனை அணுகி, வயதான பெண்கள், வயது குறைந்த நபர்களுடன் உறவு கொள்வது சாதாரண விஷயம் என்பதை சொல்ல சொன்னேன். இதற்கு பிறகே மாணவன் என்னை சந்திக்க ஆரம்பித்தான். காரில் மாணவனை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஓட்டல்கள்
போலீசார் இதை பற்றி சொல்லும்போது, "மாணவனை பிரெயின்வாஷ் செய்து அழைத்து சென்றுள்ளார் ஆசிரியை.. அவனது ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவன் பயந்தும், கலங்கியும் போயிருக்கிறான். உடனே மன அழுத்த மாத்திரைகளை தந்துள்ளார். பிறகு மதுப அருந்த தந்துள்ளார். பிறகு 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கும் அழைத்து சென்று, வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
நாளுக்கு நாள் மாணவனின் நடவடிக்கையில், அவனது பெற்றோர் கவனித்து விசாரித்தபோதுதான் மேற்கண்ட உண்மைகள் தெரிந்து, அதிர்ச்சியடைந்தனர். எனினும் +2 தேர்வு நேரம் என்பதால், இந்த விஷயத்தை பெரிதுசெய்யாமல் விட்டுவுட்டனர்.
+2 முடிந்து, மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்துவிட்டான். இதனால் மாணவனை ஆசிரியையால் சந்திக்க முடியவில்லை. தன்னுடைய வீட்டில் வேலை செய்பவரை அனுப்பி, மாணவனைத் தொடர்பு கொள்ள சொன்னார். இதற்கு பிறகுதான் பெற்றோர் போலீஸூக்கு சென்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.. விசாரணை நடந்து வருகிறது என்றனர்..இந்த சம்பவம் மும்பையை உலுக்கி கொண்டிருக்கிறது.
போக்சோ சட்டத்தில் கைது
நம்முடைய நாட்டில் ஏற்கனவே பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் வன்முறைகள் பெருகி வருகின்றன. இந்த குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..
சிறார்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் இருக்கின்றன.. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுபவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன..
ஆனாலும்கூட, ஆண் குழந்தைகளும் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிர்ச்சியை தந்து வருகிறது... சிறுமிகளை போலவே, சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியையும், வேதனையையும் தந்து கொண்டிருக்கிறது..
இதற்கு தீர்வுதான் என்ன
அதிலும் ஒழுக்கத்தை கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களே கைதாவது வருத்தத்தை தருகிறது. அதிலும் ஆசிரியைகளே போக்சோவில் கைதாகி வருவது, அதற்குமேல் பீதியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. இதுபோன்ற ஆசிரிய, ஆசிரியைகளால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அந்த பிஞ்சு குழந்தைகளின் மனநிலைமையும் சேர்த்தே பாதிக்கப்பட்டு வருகிறது..
இதற்கெல்லாம் தீர்வு என்ன? விழிப்புணர்வு தரவேண்டியது மாணவர்களுக்கா? ஆசிரியர்களுக்கா? தெரியவில்லை.. ஆனால், போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கினால், பிஞ்சுகள் எதிர்காலம் ஓரளவு காப்பாற்றப்படும் என்பதை நாம் அழுத்தமாக இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது...!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications