Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கள்ளக்காதல் தகராறில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை தீயிட்டு கொளுத்திய கள்ளக்காதலன் தானும் அதே தீயில் கருகி உயிரிழந்தார். நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தைச் சேர்ந்த சாந்தி (46) , கோயம்பேடு
பஸ் நிலையத்தில் தங்கி தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.

இவர் பஸ் நிலையத்திலேயே வேலை செய்து கொண்டு அங்குள்ள பிளாட்பார்மில் தங்கி கொண்டிருந்தார். ஏற்கனவே, இருமுறை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு கணவன்களையும் சாந்தி பிரிந்தவர் ஆவார்,

ஆத்திரம்

ஆத்திரம்

மூன்றாவதாக முத்து (48) என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. வடபழனி பஸ் டெப்போவில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
இதனிடையே, தனது 2-வது கணவர் ஸ்ரீராமுடன் சாந்திக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை சகித்து கொள்ள முடியாத முத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சாந்தி மீது ஆத்திரத்தில் இருந்த முத்து அவரை கொல்ல முடிவு செய்தார். இன்று அதிகாலை 2 மணி அளவில் சாந்தி கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருந்தார்.

தீ பரவியது

தீ பரவியது

அப்போது அங்கு வந்த முத்து தான் கொண்டு வந்த பெட்ரோல் கேனை திறந்து தனது உடலில் ஊற்றி கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சாந்தியின் உடலின் மீது ஊற்றினார். பெட்ரோல் வாசனை அறிந்து சாந்தி எழுந்து பார்க்கும்போது அந்த நபர் தீக்குச்சியை உரசி சாந்தியின் மீதும் தனது உடல் மீதும் பற்ற வைத்துக் கொண்டார். இதில் இருவரின் உடலிலும் தீ வேகமாக பரவி இருவரும் அலறியபடி பஸ்நிலையத்தில் அங்குமிங்கும் ஓடினார்கள்.

இருவரும் பலி

இருவரும் பலி

இதைக் கண்டதும் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலிலும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்கள்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதுகுறித்து போலீசார் விசாரணையில் கடந்த சில மாதங்களாக சாந்தி, முத்துவிடம் பழகாமல் 2-வது கணவர் ஸ்ரீராமுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் முத்து பெட்ரோலை வாங்கி வந்து தூங்கி கொண்டிருந்த சாந்தி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தானும் தீக்குளித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலையில் கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+