திருக்குவளையே துள்ளுதே.. எங்கெங்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்.. இதுதான் அந்த டிபன் லிஸ்ட்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த காலை உணவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவு லிஸ்ட் என்னென்ன தெரியுமா?
முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
காலை உணவு திட்டம்: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்த நிலையில், காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவும் அதிகரித்து உள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.. மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க போகிறார். இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
அட்வைஸ்: இதுகுறித்து முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு, 50 கிராம் அளவில் ரவை, கோதுமை, அரிசி, சிறுதானியங்கள் போன்றவை 15 கிராம் பருப்பு, உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் வழங்கப்படுகின்றன.. சமைத்த உணவு, 100 முதல் 200 கிராம் வரையிலும், 60 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பாரும் வழங்கப்படும். சமைத்த உணவை, பள்ளி மேலாண்மை குழு ருசி பார்த்த பிறகே, மாணவருக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதுவரை, இந்த திட்டத்தின்கீழ், காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் லிஸ்ட் இதுதான்:
- திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்கப்படும்
- செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்கப்படும்
- புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா, பொங்கல் அல்லது வெண் பொங்கல் வழங்கப்படும்
- வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா
- வெள்ளிக்கிழமை கிச்சடி வகைகளும் வழங்கப்படும்.
உத்தரவு: அனைத்து குழந்தைகளுக்கும் காலை 8 மணி முதல் 8.50 மணிக்குள் சிற்றுண்டி வழங்க வேண்டும், கலப்படமின்றி உணவு சமைக்கப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது, உணவு வழங்கும் முன், பள்ளி மேலாண்மைக் குழுவினர் அதை உண்டு பார்த்து, பின்னர் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதே உத்தரவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருத்த நம்பிக்கை: அதுமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.
திருக்குவளையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், 25 பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
பூரித்த மாணவர்கள்: அவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டார் முதல்வர்.. இன்று தொடக்க நாள் என்பதால், சாம்பார், கிச்சடி, வழங்கப்பட்ட நிலையில், அதன் சுவை குறித்து மாணவ, மாணவிகளிடம் விசாரித்து கொண்டே சாப்பிட்டார். உணவு எப்படி இருந்தது என்பது குறித்து சிறுவர் சிறுமிகளும், கூச்சப்படாமல் முதல்வருடன் பேசிக்கொண்டே உணவருந்தினார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications