ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. அந்த ரூ.50 லட்சம் எங்கிருந்து வந்தது? ஹரிஹரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இம்மாத தொடக்கத்தில் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே கைதான ஹரிஹரன் என்பவரிடம் போலீசார் நேற்றிரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல திடுக் தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.. இவரைச் சென்னையில் அவரது இல்லத்தின் அருகிலேயே வைத்துக் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

Armstrong politics crime

தேசிய கட்சியின் மாநில தலைவர் சென்னையில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: முதலில் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.. இதில் போலீசாரை தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றதாக ரவுடி திருவேங்கடம் என்பவர் மட்டும் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகும் விசாரணை தொடர்ந்த நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இதில் வரிசையாகக் கைதாகி வருகிறார்கள்.

திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, ஹரிஹரன், பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை எனப் பலரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. இதில் ஹரிஹரன் தான் குற்றவாளிகளை ஒருங்கிணைத்ததாகவும் கூலிப்படைக்கு நிதியும் இவரது வங்கிக் கணக்கில் இருந்தே சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஹரிஹரன்:
சமீபத்தில் கைதான அவர், அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கிடையே கைதான ஹரிஹரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குக் கூலிப்படையையும் ஆம்ஸ்ட்ராங் எதிரிகளையும் ஹரிஹரன் தான் ஒருங்கிணைத்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே போலீசார் ஹரிஹரனிடம் செம்பியம் போலீசா் விடிய விடிய விசாரணை செய்து வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. ஸ்கூபா வீரர்களை களமிறக்கிய போலீஸ்! ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்பு.. பரபர


விசாரணை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப் படைக்கான ரூ.50 லட்சம் ஹரிஹரன் வங்கிக் கணக்கில் இருந்தே அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த ரூ. 50 லட்சம் யாருடைய பணம்.. அது எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும், ஆம்ஸ்ட்ராங்கை பல நாட்கள் நோட்டமிட்ட பிறகே அவரை வெட்டிக் கொன்றுள்ளனர். எனவே, ரவுடிகள் சந்திப்பு எங்கெல்லாம் நடந்தன.. ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல எவ்வளவு பேரம் பேசப்பட்டது என்பது குறித்தும் போலீசார் இப்போது விடிய விடிய விசாரணை செய்து வருகிறார்கள்.

முன்னதாக இதே ஹரிஹரன் அளித்த தகவலின் அடிப்படையில் தான் கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன்களை போலீசார் கொசஸ்தலை ஆற்றில் இருந்து மீட்டிருந்தனர். அந்த செல்போனில் உள்ள தகவல்களை மீட்கும் முயற்சியில் இப்போது போலீசார் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+