தமிழகம் முக்கியம்.. நாளை பட்ஜெட்டில் வரும் சிறப்பு திட்டங்கள்.. நல்ல பெயர் எடுக்க பாஜக திட்டம்!
நாளை லோக்சபாவில் கொண்டு வரப்பட உள்ள பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்காக அதிக சலுகைகள், திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: நாளை லோக்சபாவில் கொண்டு வரப்பட உள்ள பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்காக அதிக சலுகைகள், திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால மத்திய பட்ஜெட் லோக் சபாவில் நாளை காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து இருக்கிறது.
லோக் சபா தேர்தல் வருவதால் மத்திய அரசு இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

தென்னிந்தியா கோபம்
மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்கள் எல்லாம் பெரிய கோபத்தில் இருக்கிறது. ஆந்திராவிற்கு சிறப்பு சலுகை அளிக்காதது, தமிழகத்தை கஜா உள்ளிட்ட பல சமயங்களில் ஏமாற்றியது, கேரளா வெள்ளத்தின் போது போதிய நிவாரணம் அளிக்காதது என்று தென்னிந்திய மாநில மக்கள் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். லோக்சபா தேர்தலில் இது பெரிய அளவில் எதிரொலிக்கலாம்.

தென்னிந்தியா
இதனால் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் தென்னிந்தியா மாற்று தமிழகத்திற்கான திட்டங்கள் நிறைய இருக்கும் என்கிறார்கள். லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில்தான் பாஜக மோசமாக தோல்வி அடையும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இதனால் அதை ஈடுகட்ட பாஜக முக்கியமான திட்டங்களை கொண்டு வரலாம்.

என்ன எதிர்பார்க்கலாம்
தமிழகத்தை பொறுத்தவரை, சாலை தொடர்பான திட்டங்கள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் நிறைய திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்க உள்ளது. தமிழகத்தில் நிறைய இளம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் முக்கியம்
அதேபோல் தமிழக விவசாயிகளை கவரும் வகையில் நாளை நிறைய திட்டங்கள் கொண்டு வரப்படலாம். இந்தியாவில் விவசாயிகள் போராடுவதற்கு முக்கியமாக பிள்ளையார் சுழி போட்டுக்கொடுத்தது தமிழக விவசாயிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பியூஸ் கோயல்தான்
அதேபோல் பாஜகவிற்கான தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல்தான் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருவதால் பியூஸ் கோயல்தான் தற்காலிக நிதியமைச்சராக இருக்கிறார். இதனால் அவர் தமிழகம் மீது கவனம் செலுத்தவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications