தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல செய்தி! ஓய்வூதியம் & பராமரிப்பு உதவித்தொகை அதிகரிப்பு
சென்னை: இன்று தமிழக பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.
இன்று திமுக அரசு தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே. இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இருக்கிறது. காலை 10 மணிக்குத் தமிழ்நாடு சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்..

மாற்றுத்திறனாளிகள்
தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து அமைச்சர் பிடிஆர், "மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரைக் கருணாநிதி தான் சூட்டினார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த துறை முக்கியமானது என்பதால் முதல்வர் இதைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்து, கண்காணித்து வருகிறார்.

ரைட்ஸ் திட்டம்
உலக வங்கியின் நிதியுதவியுடன் 1763 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரைட்ஸ் திட்டம் எனப்படும் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இத்திட்டம் வரும் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். உடல் குறைபாடு மதிப்பீடு சான்றிதழ், ஆரம்பக்கட்ட சிகிச்சை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும்.

ஓய்வூதியம் உயர்வு
வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கவும், பல உதவிகளைப் பெறவும் தன்னார்வ உறுப்பினர்களைக் கொண்ட 150 மையங்கள் உருவாக்கப்படும். 6.8 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கான ஓய்வூதியம் மாதம் 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. கடுமையான பாதிப்பு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை 1,500 ரூபாயில் இருந்து 2000ஆக உயர்த்த முதல்வர் ஏற்கனவே ஆணையிட்டுள்ளார். இதற்காக 1443 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதலிடம்
மாற்றுத் திறனாளிகள் தொழில் முன்னேற்றத்திற்குக் கடன் உத்தரவாதம், வட்டி மானியத்தை மாநில அரசு வழங்குகிறது. இதன் மூலம் 11,155 மாற்றுத் திறனாளிகளுக்கு 50 கோடி கடனுதவி வழங்கி நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அரசு பலன்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைய மாற்றுத் திறனாளிகள் குறித்த விரிவான டேட்டா பேஸை உருவாக்கியுள்ளோம். இதன் முதற்கட்டமாக பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பலன் பெறும் 9 லட்சம் பேரின் தரவுகள் இதில் இடம்பெற்றுள்ளது" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications