பட்ஜெட் 2026: சாமானியர்களுக்கு வரப்பிரசாதம்- வருமான வரி முதல் சுற்றுலா வரை .. முழு விவரம்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று = நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். "புதிய வருமான வரிச் சட்டம் 2025, வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்" என்று உறுதியளித்த அவர், வரி செலுத்தும் முறையை எளிமையாக்குவதே இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்று கூறியுள்ளார். இந்த பட்ஜெட் நடுத்தர மக்கள் மற்றும் சிறு வரிதாரர்களுக்குத் தலைவலியைத் தரும் "சிக்கலான வரி நடைமுறைகளை" ஒழித்து, டிஜிட்டல் முறையிலான வெளிப்படையான தீர்வுகளை வழங்கியுள்ளது.
சாமானிய இந்தியர்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அறிவிப்புகள் முழு விவரம்:

1. மிக எளிமையான வரிப் படிவங்கள்
வருமான வரி செலுத்தும் முறையை எளிதாக்க புதிய படிவங்கள் மற்றும் விதிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சாமானிய மக்களும் வரி விதிகளை எளிதாகப் புரிந்து கொண்டு, தாமாகவே முன்வந்து வரி செலுத்துவதை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
2. விபத்து இழப்பீடு வட்டிக்கு வரி விலக்கு
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் வழங்கும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு இனி வருமான வரி கிடையாது. மேலும், அந்த வட்டித் தொகையில் பிடிக்கப்பட்டு வந்த TDS முறையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
3. வெளிநாட்டுச் சுற்றுலா இனி மலிவாகும்
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களுக்கான பேக்கேஜ்களை வாங்கும் போது விதிக்கப்படும் டிசிஎஸ் வரி, தற்போதுள்ள 5% மற்றும் 20% என்ற நிலையிலிருந்து ஒட்டுமொத்தமாக 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்குத் தொகை வரம்பு எதுவும் கிடையாது.
4. கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் குறைப்பு
வெளிநாட்டிற்குப் பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கான வரி , 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
5. சிறு வரிதாரர்களுக்குத் தானியங்கிச் சான்றிதழ்
குறைந்த வரிப் பிடித்தம் அல்லது வரிப் பிடித்தம் இல்லா சான்றிதழ் பெற இனி அதிகாரிகளை நாடி விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கென விதிகள் அடிப்படையிலான தானியங்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
6. முதலீட்டாளர்களுக்குப் படிவம் 15G / 15H எளிமை
பல நிறுவனங்களில் பங்குகள் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், தங்களது 15G அல்லது 15H படிவங்களை இனி ஒரு முறையே சமர்ப்பித்தால் போதும். அந்தத் தகவலைப் பொதுக் காப்பகங்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்த்துவிடும்.
7. வரித் தாக்கல் திருத்தம் செய்ய கூடுதல் அவகாசம்
தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளைத் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சிறிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
8. வரி தாக்கல் செய்யப் புதிய காலவரிசை
ஒரே நேரத்தில் இணையதளம் முடங்குவதைத் தவிர்க்க, வரி தாக்கல் செய்யப் வெவ்வேறு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
ITR 1 மற்றும் ITR 2: ஜூலை 31 வரை.
வணிக நிறுவனங்கள் (Non-audit) மற்றும் அறக்கட்டளைகள்: ஆகஸ்ட் 31 வரை.
9. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சொத்து விற்பனை எளிமை
ஒரு வெளிநாடு வாழ் இந்தியரிடமிருந்து இந்தியாவில் இருக்கும் சொத்தை வாங்கும் போது, வாங்குபவர் தனது PAN கார்டு மூலமே வரியைச் செலுத்திவிடலாம். இதற்காகத் தனியாக TAN (Tax Deduction and Collection Account Number) எடுக்க வேண்டிய அவசியமில்லை.
10. வெளிநாட்டுச் சொத்துக்களைப் பதிவு செய்ய ஒருமுறை வாய்ப்பு
இளம் வல்லுநர்கள், மாணவர்கள், மென்பொருள் ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த NRI-கள் தாங்கள் வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களைத் தெரியாமல் அறிவிக்கத் தவறியிருந்தால், அவர்களுக்கு ஒருமுறை மட்டும் 6 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு வருமானம்/சொத்துக்கள் ₹1 கோடி வரை உள்ளவர்களுக்கும்,வருமானத்தை அறிவித்துச் சொத்துக்களைப் பதிவு செய்யாத ₹5 கோடி வரை உள்ளவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications