சீரியல் நடிகை சந்தியா போட்ட வீடியோ.. சென்னை சீதாம்மன் கோயிலில் எருமை கன்றுக்குட்டியை? இதென்ன புதுசா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் வெகு விமர்சையாக கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணியில் சீமாத்தம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாவில், எருமை கன்றுக்குட்டி பலியிட அழைத்து சென்றதாக சீரியல் நடிகை சந்தியா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையும் நடந்துள்ளது.. என்ன நடந்தது சென்னையில்?

சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ளது சீமாத்தமன் கோயில்.. இது கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோயிலாகும்.. மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால், ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.

Actress Sandhya Buffalo calf Chennai temple

அப்படித்தான், இந்த வருடமும் திருவிழா ஆடி மாதம் நடைபெற்றுள்ளது.. பக்தர்களும் தங்களது வேண்டுதலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக வழங்கினார்கள்.. ஆனால், சமீபத்தில் ஒரு எருமை கன்றுக்குட்டி காணிக்கையாக வழங்கப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

சின்னத்திரை நடிகை சந்தியா

சின்னத்திரை நடிகை சந்தியா இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் உள்ள சீமாத்தம்மன் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கன்றுக்குட்டியை பலியிட உள்ளார்கள். நீங்கள் இந்த போட்டோவில் பார்த்துக்கொண்டு இருக்கும் கன்று குட்டியைத் தான் பலியிட இருக்கிறார்கள். தயவு செய்து இதை செய்யாதீர்கள்.

இத்தனை வருடமாக உங்கள் கோவிலில் எந்தவிதமான ஆடு, மாடோ பலியிடப்படவில்லை என்கிறார்கள். இத்தனை வருஷமாக நடக்காத போது இப்போது மட்டும் ஏன் அதை செய்ய முன்வருகிறீர்கள்? இத்தனை ஆண்டுகளாக கடவுள் உங்களை வாழ வைத்துக்கொண்டு தானே இருக்கிறார்? அந்த உயிருக்காக நான் கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து அதை செய்யாதீர்கள்.

ஆடு, கோழிகள்

அந்த கன்று குட்டிக்கு எந்த காசு வேணுமோ, அதை நாங்க கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். திருவல்லிக்கேணியில் உள்ள அந்த கோவிலில் யாராவது இருந்தீங்க என்றால், தயவு செய்து இதை தடுத்து நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்..

சந்தியாவின் இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு, விலங்கு சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ் காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கே நேரடியாக சென்றார்.. கோயில் நிர்வாகிகளிடம் எருமை கன்றுக்குட்டி பலியிடப்படுகிறதா? என்று விசாரித்தார். எந்த ஆடு மாடுகளும் கோயிலில் பலியிடுவது கிடையாது என்று கோயில் நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது.

அதாவது, 150 ஆண்டுகள் பழமையான சீமாத்தம்மன் கோயில் பக்தர்கள் வேண்டுதல் நிவர்த்திக்காக ஆடு, கோழிகளை நேர்த்தி கடனாக விடுவது வழக்கமாம்.. அதன்படிதான், பக்தர் ஒருவர் வழிபாட்டுக்காக எருமை கன்றுக்குட்டி ஒன்று காணிக்கையாக கோயில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விலங்குகள் பலி?

இதைக்கேள்விப்பட்ட போலீசார், அம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட எருமை கன்று குட்டியை மீட்டு, ஜஸ் அவுஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய சீமாத்தம்மன் கோயில் நிர்வாகி புருஷோத்தமன், "60 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் விலங்குகள் பலியிட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் தலைமுறைக்கு பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை.. இதெல்லாம் தவறான தகவல். சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற தவறான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

எருமை கன்றுக்குட்டி

இதையடுத்து, சாய் விக்னேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கோயில் நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வேண்டுதலுக்கு கொடுக்கும் மாடுகள் பலியிடுவது வழக்கம். அதன்படி பலியிட எருமை கன்றுக்குட்டி வைத்திருந்தோம். ஆனால், இணையத்தில் இந்த செய்தி பரப்பியதால் அதை நிறுத்தி விட்டோம் என்று கோயில் நிர்வாகிகள் கூறினார்கள்" என்றார்.

நடிகை வெளியிட்ட வீடியோ, அதைத்தொடர்ந்து நடந்த விசாரணை உள்ளிட்ட சம்பவத்தால் திருவல்லிக்கேணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+