பஸ் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு.. தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து.. அரும்பாக்கத்தில் அலறிய மக்கள்!
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் அரசுப் பேருந்தை இயக்கி கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் வாகனங்களில் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து மோதி 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னையில் கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அரும்பாக்கம் 100 அடி சாலையில் வந்த போது, திடீரென பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சிக்கி 50 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் பேருந்து விபத்தில் பலத்த காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அறிந்து சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வந்தனர். இதன்பின் உடனடியாக அரசுப் பேருந்து ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கார்கள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. பேருந்தை இயக்கி கொண்டிருந்த போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விபத்து ஏற்பட்ட சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் வேலுமணி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
பேருந்தை ஓட்டிய போதே மாரடைப்பு காரணமாக டிரைவர் வேலுமணி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் 4 கார்கள் சேதம் அடைந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications