உயிரை பறித்த பஸ் ரீல்ஸ்.. கைதான கேரள பெண்! வண்டை வண்டையாக திட்டும் சென்னை மக்கள்.. வீடியோவை பாருங்க
திருவனந்தபுரம்: சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை இளம்பெண் பரப்பியதால் கேரள இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண் கைது செய்யப்பட்ட நிலையில், இளம்பெண் செய்தது தவறு என மக்கள் பலரும் தங்கள் கோபத்த்தை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலில் சென்னை மக்கள் பகிர்ந்து கொண்ட கருத்தை இங்கே காணலாம்.
கேரளாவின் கோழிக்கோட்டில் பேருந்தில் பயணம் செய்த போது தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக தீபக் என்ற இளைஞரை வீடியோ எடுத்து இளம்பெண் ஒருவர் அதை ரீல்ஸ் ஆக பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை அறிந்த தீபக் (வயது 42) கடும் மன உளைச்சல் அடைந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்டார்.

தீபக்கை தற்கொலைக்கு தூண்டியதாக
இளம்பெண் ஷம்ஜிதா பகிர்ந்த வீடியோவில், தீபக் உள்நோக்கத்துடன் அப்படி நடந்து கொண்டதாக தெரியவில்லை என்றும் அந்த இளம்பெண்ணே வீடியோ எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக திட்டமிட்டு நெருங்கிச் சென்றதாகவும் நெட்டிசன்கள் பலரும் காட்டமாக விமர்சித்தனர்.
இந்த விவகாரம் கேரளாவை உலுக்க தொடங்கிய நிலையில், கேரள மனித உரிமை ஆணையம் போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. அதேபோல, தீபக்கை தற்கொலைக்கு தூண்டியதாக ஷம்ஜிதாவின் தாயாரும் போலீசில் புகாரளித்தார்.
கோழிக்கோடில் கைது செய்த போலீசார்
இதையடுத்து, ஷம்ஜிதா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனால், பயந்து போன ஷம்ஜிதா தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கோழிக்கோட்டின் வடகாரா பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
தற்போது கேரளாவில் ஆண்கள் பஸ்சில் செல்லவே அஞ்சுவதாகவும், முன்னெச்சரிக்கையாக தங்களுடன் அட்டை பெட்டிகளையும் எடுத்துச் செல்வது போலவும் கடந்த சில நாட்களாக ரீல்ஸ்கள் வைரல் ஆகி வருகின்றன.
வண்டை வண்டையாக திட்டிய சென்னை மக்கள்
இதற்கிடையே, கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து சென்னையில் பொதுமக்களிடம் ஒன் இந்தியா தமிழ் கருத்து கேட்டது. அப்போது கேரள பெண்ணின் செயல் குறித்து பலரும் காட்டமாக விமர்சித்தனர். மக்கள் தெரிவித்த கருத்துக்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications