புக்கிங் தொடங்கியது.. தமிழகத்தில் தொடங்குகிறது விரைவுப்பேருந்து போக்குவரத்து.. என்னென்ன விதிமுறை!
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் தீவிரமாக அமலுக்கு வந்து இருக்கிறது. பெரும்பாலான கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க தற்போது பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
குறைவான எண்ணிக்கையில் தற்போது பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.சென்னையில் மாநகர பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.

விரைவு பேருந்து
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து வரும் 7ம் தேதி துவங்குகிறது. மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்க உள்ளது. சாதாரண பேருந்து மட்டுமின்றி எஸ்இடிசியின் சொகுசு மற்றும் விரைவு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதே நாளில் 7 வழித்தடம் வழியாக ரயில் போக்குவரத்தும் தொடங்க உள்ளது. மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் விரைவுப்பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் பேருந்து புக்கிங் தொடங்குகிறது. கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விதிமுறைகள்
இதற்கான விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 50 பேர் பயணிக்கும் பேருந்தில் 50% பேர் மட்டுமே பயணிக்க முடியும். மொத்தம் பேருந்து ஒன்றிற்கு 26 பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக 524 பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளனர். 1000க்கும் அதிகமான பேருந்துகள் உள்ள நிலையில் 524 பேருந்துகள் தற்போது இயங்கும்.

கடுமையான கட்டுப்பாடு
அதேபோல் பேருந்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளே பயணிகள் நுழையும் முன் அவர்களுக்கு ஹேண்ட் சானிடைசரில் கை கழுவ அனுமதிக்கப்படும். அதோடு நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு பயணத்திற்கு முன் வெப்பநிலைமானியல் வெப்பம் சோதனை செய்யப்படும். வெப்பநிலை அதிகம் இருக்கும் ஊழியர்கள் , பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications