அறிவிப்புகளின் பொக்கிஷம்... அதிமுக தேர்தல் அறிக்கைக்கு வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் வரவேற்பு!
சென்னை: அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் நடைபாதை வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு பயனுள்ள அறிவிப்புகள் உள்ளதால் அனைத்து வியாபாரிகளும், சிறு குறுந்தொழில் முனைவோர்களும் அதிமுக தேர்தல் அறிக்கைக்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் அறிவிப்புகளை அள்ளித்தெளிக்கும் பொக்கிஷமாக அதிமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருவதால் தேர்தலில் வெற்றியை ஈட்டித்தரும் கதாநாயகனாக அதிமுக தேர்தல் அறிக்கை உருவெடுத்துள்ளது.

அறிவிப்புகளை அள்ளித் தெளித்த தேர்தல் அறிக்கை
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

வியாபாரிகள் வரவேற்பு
இந்த தேர்தல் அறிக்கையில் நடைபாதை வியாபாரிகளின் நலன் காத்திடும் வகையில் அவர்களுக்கு 10,000 ரூபாய் வட்டியில்லா சுழல் நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறு வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களது வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொழில் முனைவோர்களும் பாராட்டு
இதேபோல் சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின் சலுகை 200 குதிரை திறனில் இருந்து 250 குதிரை திறனாக உயர்த்தி வழப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறு மற்றும் குறுந் தொழில் நடத்துவோர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தேர்தல் அறிக்கை வெற்றியை ஈட்டும் கதாநாயகன்
சிறு வியாபாரிகள் முதல் சிறு குறு தொழில் புரிபவர்கள் வரை அனைவரும் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை பாராட்டி வரவேற்பு தெரிவிக்கின்றனர். இதன் மூலம் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவிற்கு வெற்றியை தேடித் தரும் கதாநாயகனாக உருவெடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications