16 நாட்கள் கழித்து! சிவப்பு நிற Thar காரில் விஜய் வீட்டிற்கு வந்த புஸ்ஸி ஆனந்த்! என்ன பேசினார்?
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் வெளியுலகிற்கு வந்து நேராக விஜய் வீட்டிற்கு நேற்று இரவு சென்றார். அங்கு அவருடன் 20 நிமிடங்களுக்கு ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் புதுவை நோக்கி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியான பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார்.

அவர் சேலம், ஏற்காடு, புதுவை, பெங்களூர், பீகார் உள்ளிட்ட இடங்களில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவர் வங்கக் கடலில் ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டே இருப்பதாக சினிமா பாணியில் சொல்லப்பட்டது.
சாலையில் புஸ்ஸி ஆனந்த்
அந்த சம்பவம் நடந்த போது ஏதோ ஒரு சாலையில் காரை நிறுத்திவிட்டு புஸ்ஸி ஆனந்த் கவலையில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அப்போது ஒரு நிருபர் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றபோது கூட அவரது டிரைவர், அவரே "கவலையில் இருக்கிறார், இப்போது வேண்டாம், பிறகு பேட்டி எடுக்கலாம்" என கூறியிருந்தார்.
16 நாட்கள்
அன்று முதல் நேற்று வரை, அதாவது 16 நாட்கள் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த், நேற்றைய தினம் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு சிவப்பு நிற தார் (Thar Roxx) காரில் புஸ்ஸி ஆனந்த் சென்றிருந்தார்.
20 நிமிடங்கள்
அவர் விஜய்யுடன் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வெளியே வந்த புஸ்ஸி ஆனந்தின் கார், புதுவையை நோக்கி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யுடன் அடுத்த கட்ட ஆலோசனை
விஜய்யுடன் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அது போல் இன்னும் ஓரிரு நாட்களில் விஜய் நேராக சென்று கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவர் நிவாரணத் தொகையையும் அவர்களிடம் வழங்குவார்.
தத்தெடுக்கும் விஜய்
மேலும் அந்த 41 பேரின் குடும்பத்தினரையும் விஜய் தத்தெடுக்க போகிறாராம். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளை அவரே ஏற்பார் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு விஜய் மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பு தனக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே பார்க்கிறாராம். இந்த தீர்ப்பால் நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் தலைமறைவாக இருந்துவிட்டு தற்போது வெளியே வந்திருக்கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா
இத்தனை நாளாக அடுத்த கட்ட பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம் என ஆதவ் அர்ஜுனாவும் அருண் ராஜும் கூறிய போதெல்லாம் விஜய் மறுத்துவிட்டாராம். உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பார்த்துவிட்டு பிறகு அதற்கான பணிகளில் இறங்கலாம் என்று கூறியிருந்தாராம். எனவே இனி விஜய் அடுத்தடுத்த பயணங்களை திட்டமிடுவார் என்றே சொல்லப்படுகிறது.
வில்சன் கூறியது என்ன
எனினும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் வில்சனோ, இது இடைக்கால தீர்ப்பு என குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை சிபிஐ விசாரணையில் விஜய்க்கு எதிராக அறிக்கை போகும் வரை அவருக்கோ கட்சிக்கோ பிரச்சினை இல்லை என்றே சொல்லலாம்.
-
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு












Click it and Unblock the Notifications