தங்கப் பிரியர்களுக்குத் தங்கமான நியூஸ்! அடுத்த 6 ஆண்டுகளில் 1 சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்!
சென்னை: இன்னும் 6 ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1 லட்ச ரூபாயை எட்டிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எங்குப் பார்த்தாலும் அக்ஷய திருதியை விளம்பரங்கள் களைக்கட்டத் தொடங்கி இருக்கிறது. தங்கம் வாங்குங்கள், வைரங்கள் வாங்குங்கள் என்று திரை நட்சத்திரங்கள் ஆளுக்கு ஒரு கடைக்கு முன்னதாக நின்று கொண்டு மக்களை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கம் எனது இந்தியாவைப் பொறுத்தவரை ஏழைகளின் எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. முன்பு எல்லாம் மாதத்திற்கு ஒருமுறை விலை ஏறும். இப்போது எல்லாம் நொடிக்கு ஒரு விலை என்ற நிலையை நோக்கி விர்ர்ர்ர்ர் என்று விண்ணை எட்டி வருகின்றது.
இன்றைய கணக்குப்படி ஒரு சவரன் கிட்டத்தட்ட 6,650 என்ற அளவை எட்டி உள்ளது. அதற்குப் பிறகு செய்கூலி, செய்யாத கூலி என்று ஒரு பில் வேறு போடுவார்கள்.
அந்த விலையைப் பார்த்தால் தலையே சுற்றிவிடும். அப்புறம் அதைக் குறைக்க மேனேஜரை பார்க்க வேண்டும். அவர் ஒரு பர்சண்டேஜ் குறைப்பார். அதற்கு அப்புறம் அவருக்கு மேல் உள்ள அதிகாரி அரை பர்சண்டேஜ் குறைப்பார்.

இப்படி, தங்கம் வாங்குவது என்பதே ஏதோ ரேசில் கார் ஓட்டுவதைப் போலச் சாகசமான விசயமாக மாறிப்போய்விட்டது.
நிலைமை இப்படி டாப் கியரில் உயர்ந்து கொண்டிருக்கும் போது, அடுத்து வரப்போகும் 6 ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிடும் என்கிறார் தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்.
தங்கத்தின் விலை உயர்வு குறித்து ஜெயந்திலால் சலானி, “தங்கம் விலை உயர்ந்தாலும் விற்பனையில் அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தங்கம் விற்பனையானது 30% கூடுதலாகவே நடந்துள்ளது.

கடந்த அக்ஷய திருதியை அன்று விற்பனையானதைவிட இந்த ஆண்டு இத்தனை சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த அக்ஷய திருதிக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை 5605 ரூபாய் இருந்தது. அதே இந்த ஆண்டு ஒரு கிராம் விலையானது 6770 ரூபாய். கிட்டத்தட்ட ஒரு சவரனுக்கு 9 ஆயிரம் ரூபாய் விலை ஏறியுள்ளது.
இப்படிக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டு அக்ஷய திருதிக்கு ரூ.6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை விலையானது கூடிக்கொண்டேதான் செல்கிறது.
அப்படிப் பார்த்தால் வரும் 2030க்குள் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ஒரு லட்சம் ரூபாயை மிக எளிதாகத் தொட்டுவிடும் என்பதுதான் கணிப்பு. அதாவது இன்னும் 6 ஆண்டுகளில் இந்த விலை உயர்வை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் இவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தாண்டி, சில ஆண்டுகளாகச் சீனா போன்ற நாடுகளும் தங்களின் கஜானாவில் தங்கத்தை வாங்கி சேமிக்க ஆரம்பித்துள்ளன. பத்திரங்கள் மூலமும் தங்கமாகவும் இந்த முதலீடு நடைபெறுகிறது.
எனவே தங்கத்தின் மதிப்பு என்பது வரும் ஆண்டுகளில் உயரவே செய்யும். கீழே இறங்க வாய்ப்பே இல்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தின் விலை எப்படி இருந்தது என்று ஆராய்ந்து பார்த்துக் கணக்கிட்டால் நான் சொல்வது உண்மை என்பது விளங்கும்.
2013 அல்லது 2014இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை வெறும் 1500 ரூபாய்தான் இருந்தது. ஒரு சவரன் 12 ஆயிரம் ரூபாய்தான் இருந்தது. இன்றைக்கு 55 ஆயிரம் ரூபாயைக் கடந்து சென்றுகொண்டே உள்ளது. அப்படி என்றால் இந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலையானது 4 மடங்கு உயர்ந்துள்ளது.
அதை வைத்து கணித்துத்தான் இன்னும் 6 ஆண்டுகளில் 1 சவரன் 1 லட்சம் ரூபாயைத் தொட்டுவிடும். அது ஒரு பெரிய விசயமே இல்லை. இன்னும் ஆழமாகப் பார்த்துக் கணக்கிட்டால், 2030க்கு முன்பே இந்த 1 லட்சத்தைத் தங்கம் தொட்டு விடும்.
இனிமேல் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. சொல்லப் போனால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம், உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இந்த நிலை சீராக சில ஆண்டுகள் ஆகும். அது மட்டுமல்லாமல் போர் பாதிப்புகளால் தங்கத்தின் விலையில் ஒரு நீடித்த நிலைத்தன்மை வந்துள்ளது.
ஆகவே, தங்கத்தில் முதலீடு செய்வது என்பது மிகமிக பாதுகாப்பானது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டுதான் போகிறது. இந்தக் கணிப்புகள் வீழ்ச்சிக்கான அறிகுறிகள் அல்ல. வளர்ச்சிக்கான அறிகுறிகள்தான்” என்கிறார்
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications