மல்லாக்க படுத்த காரப்பன் sorry கரப்பான் மாதிரி ஆயிடுச்சே திமுக.. எச்.ராஜா நக்கல்
திமுகவின் தோல்வி குறித்து எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: செம குஷியில் இருக்கிறார் எச்.ராஜா.. எப்படா ஒரு குட்டு வைக்கலாம் என்று காத்திருந்தவர்.. இப்போது இடைத் தேர்தல் முடிவை வைத்து திமுகவையும் சேர்த்து வாரி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
சில தினங்களாகவே காரப்பன் விவகாரம் பேசப்பட்டு வருகிறது. சிறுமுகையில் காரப்பன் சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர்தான் காரப்பன். இவர் நெசவுத்தொழில் சம்பந்தப்பட்ட துறைகளில் சில பொறுப்புகளை வகிக்கிறார்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கருத்தரங்கில் பேசியபோது, ஸ்ரீ கிருஷ்ணர், அத்திவரதர் பற்றி சில விமர்சனங்களை முன் வைக்கவும்,கொந்தளித்த இந்து அமைப்புகள், இவர் கடையில் யாரும் துணிகள் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரமும் செய்தனர்.
மேலும் "இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்" என்று எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
எச்.ராஜாவின் இந்த பதிவிற்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தனது ட்விட்டர் பதிவில் "யாரும் எதிர்பார்த்திராத வகையில், சிறுமுகை காரப்பன் அவர்களுக்கான ஆதரவு பெருகி, முகநூல், ட்விட்டர் அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகிறது. அடடே, மெர்சல் படம் தொடங்கி, காரப்பன் வரை ஹெச்.ராஜா "தொட்டதெல்லாம் துலங்குகிறது".@HRajaBJP #WeSupportKarappanSilks" என்று பதிலளித்து இருந்தார்.
சுப வீரபாண்டியன் இப்படி ஒரு கருத்தை சொல்லி 3 நாள் ஆன நிலையில் அமைதியாக இருந்த எச். ராஜா.. இப்போது இடைத் தேர்தல் முடிவை வைத்து கலாய்த்து ஒரு டிவீட் போட்டுள்ளார். மறக்காமல் திமுகவையும் வாரி விட்டுள்ளார்.
அதில், "ஆனால் ஸ்டாலின் தொட்டது துலங்க மாட்டேங்குதே. இன்று திமுக நிலைமை மல்லாக்க படுத்த காரப்பன் sorry கரப்பான் மாதிரி ஆயிடுச்சே" என்று போட்டுத் தாக்கியுள்ளார்.
ஆனால் ஸ்டாலின் தொட்டது துலங்க மாட்டேங்குதே. இன்று திமுக நிலைமை மல்லாக்க படுத்த காரப்பன் sorry கரப்பான் மாதிரி ஆயிடுச்சே. https://t.co/IB6IWbCOOo
— H Raja (@HRajaBJP) October 24, 2019
காரப்பன்.. அவர் பாட்டுக்குக் கடை வச்சு நடத்திட்டிருந்தார். சிறுமுகையைத் தாண்டி யாருக்குமே அவரைத் தெரியாது.. இப்ப அவரை ஊர் முழுக்க இழுத்து விட்டாச்சு.. அது சரி.. எப்பப்பா இந்த காரப்பான் கதை முடியும்.. அதாவது இந்த பஞ்சாயத்து முடியும்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications