பாரத தேசத்தை யாராலும் பிளவுபடுத்த முடியாது! குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு!
ராமநாதபுரம்: இன்றைக்கும் என்றைக்கும் பாரத தேசத்தை யாராலும் பிளவுபடுத்த முடியாது. இந்த தேசம் வாழ்க என்று சொல்லும் நாம் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும், காசியும், ராமேசுவரமும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள் என துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காசியில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்றது.
இதில், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
நிகழ்வில் தலைமையுரையாற்றிய இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்," புனித பாரத அண்னையின் பாதத்தை தொட்டு தொடங்குகிறேன். அப்துல் காலம் பிறந்த மண்ணில் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாத உறவை கொண்டது. அதனால் தான் காசியில் தொடங்கிய காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.
சி.பி.ராதாகிருஷ்ணன் உரை
நாம் நாட்டிற்கு இழுக்கு ஏற்படும் போது அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். பாரதி கண்ட கனவு பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி மேன்மையானது என கடைசி மனிதனின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். தமிழகத்தில் யார் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. என்றும் மக்களில் ஒருவராக உங்களில் ஒருவராக இருப்பேன்.
பாரத தேசம்
இன்றைக்கும் என்றைக்கும் பாரத தேசத்தை யாராலும் பிளவு படுத்த முடியாது. இந்த தேசம் வாழ்க என்று சொல்லும் நாம் தமிழுக்கு எதிரானவர்களா? இல்லை. எப்படி தேசம் ஒரு கண் தேசன் என்று சொன்னால், இன்னொரு கண் தங்க தாய் மொழி நம் தமிழ் தான். அதனை யாராலும் மாற்ற முடியாது. மோடி அழகாக சொன்னார். தொன்மையான காசி நகரமும் உலகத்தின் தொன்மையான மொழியான தமிழும் இணைகிறது என்று சொன்னால் தான் அது காசி தமிழ் சங்கமம் என்று சொன்னார்கள்.
ராமேசுவரம்
அப்துல் கலாமை தந்த மண்ணில் இந்த விழாவை கொண்டாடுவது நம் அனைவருக்குமே பெருமை. ராமேசுவரம் மண்ணில் இந்த இரண்டு ஒளி விளக்குகள் காசியும், தமிழும் சங்கமிக்கும் விழாவாக இது நடைபெறுகிறது. தமிழகத்தின் வீதியில் இருந்து தேசியத்தை பற்றி யோசித்து பாடியவர் பாரதியார். எத்தனை மொழிகளை நாம் பேசிநாலும் தர்மத்தின் பிரகாரம் நாம் வாழ வேண்டும் என்கிற உயர்த தத்துவம் தான் இன்று இந்திய தேசத்தை ஒருங்கிணைந்த தேசியமாக மாற்றி இருக்கிறது. காசியும், ராமேசுவரமும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள். உலகில் பாரதம் உச்சம் தொடும்போது, பாரதத்தில் தமிழகம் உச்ச நிலையை தொட வேண்டும். வளமான தமிழகம், வளமான இந்தியா. பாரதத்தை எந்த தீய சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது." என்றார்.
-
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications