அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்.. விஜய் வீட்டிற்கு போன நிர்மல்குமார்! சந்திப்பில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனையடுத்து, தவெக தலைவர்கள் பொதுவெளிக்கு வர தொடங்கியுள்ளனர். விஜய்யை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில இணை செயலாளர் சி.டி.நிர்மல்குமார், அடுத்த கட்ட நகர்வு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார்.

அவர் பேசியதாவது, "பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குள் என்னென்ன கேள்விகள் இருந்ததோ, அதை உச்சநீதிமன்றம் வாயிலாக எழுப்பி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு கண்டிப்பாக மக்களுக்கான தீர்ப்பு. கடந்த 2 வாரத்துல நடந்த எல்லா டிராமாவும் பார்த்திருப்பீங்க. எல்லா விஷயத்தையும் நீங்க பார்த்திருப்பீங்க. உச்சநீதிமன்றம் நிறைய வழிகாட்டுதல் கொடுத்திருக்காங்க. எப்படி எஸ்ஐடி இருக்கணும், என்னென்ன விசாரணை நடக்கணும்னு குறிப்பிட்டிருக்காங்க. எங்ககிட்ட என்னென்ன ஆதாரங்கள் இருக்கோ, எல்லாத்தையும் விசாரணை ஆணையத்திடம் நாங்க கண்டிப்பா கொடுப்போம். கண்டிப்பாக நீதி வெல்லும்.

Vijay TVK Karur

ஒரு மோசமான அரசியலை தமிழக மக்களும், அனைவரும் பார்த்துட்டு இருக்கோம். இந்த மாதிரி ஒரு மோசமான அரசியலை யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தை ஒரு நல்ல நிலைமைக்கு மாற்ற வேண்டும் என்று எங்களுடைய தலைவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்த அரசியலை தமிழக மக்களுடைய முழு ஆதரவுடன் மிகப்பெரிய ஒரு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எங்களுடைய கட்சியில எங்களுடைய தலைவர் உட்பட எல்லாருமே சாமானியர்கள். தலைவர் ஒவ்வொரு ஒவ்வொரு நிமிஷமும் அவருடைய வாழ்க்கையை அவருடைய சொந்த உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

எங்க கட்சியில எல்லாருமே அப்படித்தான். இப்ப நான் உட்பட நான் உட்பட எல்லாருமே வந்து சாதாரண சாமானியர்கள்தான். ஒரு சாமானியர் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்னு தமிழகத்துல இப்ப இந்த 2 வாரத்துல நாங்க பாத்துட்டோம். இந்த 2 வாரமும் பல பல கட்டுக்கதைகள், பல விஷயங்களை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டது. எங்களுடைய நியாயமான கேள்விகளை பொது வழியில் கேட்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்துச்சு.

இந்த விசாரணை எல்லாம் நிறைவு பெறும் பொழுது, தமிழக மக்களுக்கு உண்மை தெரியவரும். அன்றைக்கு வெளிச்சத்துக்கு வரும். கண்டிப்பா விரைவில் விரிவான செய்தியாளர் சந்திப்பை நாங்க நடத்துவோம். எங்களுடைய தலைவரும், கரூர் மக்களை அந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

இந்த 2 வாரத்தில் நாங்கள் எது பேசியிருந்தாலும், அரசியலுக்காக பேசுற மாதிரி இருந்திருக்கும். அரசியலுக்காக பண்ற டிஃபன்ஸா இருந்திருக்கும். அதை செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஏன்னா பலியானது எங்களுடைய சொந்தங்கள், எங்களுடைய உறவுகள், எங்களுடைய நண்பர்கள். இன்னும் சில நாட்களில், எங்களுடைய தலைவர் அந்த மக்களை சந்திப்பார். சந்தித்த பிறகு, ஒரு விரிவான செய்தியாளர் சந்திப்பை நாங்க கொடுப்போம். அன்னைக்கு இன்னும் டீடைலா பேசுவோம்.

இதுக்கு முன்னாடி திமுக எல்லா விஷயத்துலயும் சிபிஐ விசாரணை கேட்டு இருந்தது. அப்போதெல்லாம் அக்கட்சி மத்தியில் உள்ள கட்சியுடன் கூட்டணியில் இருந்தது என்று சொல்லிவிட முடியுமா? சிபிஐ விசாரணை கோரிக்கைக்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. தங்கள் அனுமதி இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக பலர் கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் பலர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளார்கள். பிறழ்சாட்சிகளின் மன்னராக செந்தில் பாலாஜி இருக்கிறார்.

50 பேரையே பிறழ் சாட்சி சொல்ல வச்ச செந்தில் பாலாஜிக்கு, இங்க இருக்கிற நாலு பேரையும் மிரட்டி மாத்தி பேச வைக்கிறது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. விரிவா பேசலாம்" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+