"பிளான் பி".. தனியாக போன சிவி சண்முகம்.. எடப்பாடி இடத்திற்கே குறியாமே? அதிர்ந்து நிற்கும் அதிமுக!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏதாவது பிரச்சனை வந்தால், அவருக்கு எதிரான வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரின் இடத்தை பிடிக்க சிவி சண்முகம் முயல்வர் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
திமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அதிமுக - பாஜக மோதல் தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியலில் எழுந்துள்ளது. அதிமுக + பாஜக கூட்டணி மொத்தமாக முறிகிறதா.. பாஜகவை கழற்றிவிட எடப்பாடி முடிவு செய்து உள்ளாரோ என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. சிவி சண்முகம் இப்படி பேசியது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் பின்வருமாறு,

பேட்டி
கேள்வி: எம்ஜிஆர் நினைவு நாளின் போது ஓபிஎஸ், எடப்பாடி தனியாக அஞ்சலி செலுத்தியது போலவே சிவி சண்முகம் தனியாக அஞ்சலி செலுத்தியது ஏன்?
பதில்: எடப்பாடி கோஷ்டியில் இருக்கும் சிவி சண்முகம் தனியாக சில செயல்களை செய்து கவனத்தை ஈர்த்து வருகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு கருத்துக்களை, செயல்களை எதற்கும் அஞ்சாமல் சிவி சண்முகம் பேசி இருக்கிறார். மனதில் தோன்றுவதை யோசிக்காமல் அவர் பேசி இருக்கிறார். விழுப்புரம் உள்ளிட்ட மத்திய வட மாவட்டங்களில் சிவி சண்முகம் வலிமையான தலைவர் ஆகிவிட்டார். 60 தொகுதிகள் வரை வன்னியர் வாக்குகளை பாதிக்கும் தலைவராக அவர் மாறிவிட்டார். ஆனாலும் 2021 தேர்தலில் அவர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதற்கு காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் அவருக்கு விழவில்லை.

பாஜக கூட்டணி
பாஜக கூட்டணி காரணமாக இந்த வாக்குகள் அவருக்கு விழவில்லை. தேர்தல் முடிந்தும் கூட வெளிப்படையாக அதை சிவி சண்முகம் பேசி இருந்தார். தொண்டர்களின் மனநிலையை வெளிப்படையாக அன்று சிவி சண்முகம் பேசினார்.
கேள்வி: சிவி சண்முகம் பாஜகவை எதிர்க்கிறார், ஆனால் வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் பாஜகவை எதிர்க்கவில்லையே?
பதில்: ஆம்.. பேச மாட்டார்கள். சிவி சண்முகம் பேசுவது போல வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் பேச மாட்டார்கள். ஏன் எடப்பாடியே பேச மாட்டார். பாஜக இல்லாமல் தனியாக செல்வோம் என்று இப்போது எடப்பாடி சொல்ல மாட்டார். எதிர்காலத்தில் சொல்வாரா என்று பார்க்க வேண்டும். பாஜகவோடு எடப்பாடிக்கு தற்போது இருப்பது ஊடல். சண்டை கிடையாது. எனக்கு இவ்வளவு எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

எடப்பாடி அமைதி
என்னை ஒற்றை தலைமையாக அங்கீகரிக்கவில்லை என்று பாஜகவை பார்த்து கோபப்படுகிறார். அதுதான் அவரின் நிலைப்பாடு தற்போது. பாஜகவை அவர் இப்போது விட்டுட்டு வந்தால், அவர் காணாமல் போய்விடுவார். பாஜக இல்லாமல் அவரால் அரசியல் செய்ய முடியாது. அதே சமயம் பாஜகவை எதிர்த்து பேசும் சிவி சண்முகத்தை அனுசரித்து போக வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருக்கிறார். கடந்த வட மாவட்டத்தில் அதிமுக வென்ற இடங்களில் 10 இடங்களில் சிவி சண்முகத்திற்கு நெருக்கமான நிர்வாகிகள்தான் வென்றனர். இதனால் சிவி சண்முகத்தின் தயவு கண்டிப்பாக எடப்பாடிக்கு தேவை.

சிவி சண்முகம்
சிவி சண்முகம் அன்று எம்ஜிஆர் நினைவிடத்திற்கு தனியாக வர காரணம் இருக்கிறது. திமுக + பாஜக கூட்டணி ஒன்று சேரும் என்று சிவி சண்முகம் சொன்னதை அவரின் சொந்த கருத்து என்று ஜெயக்குமார் கூறினார். இதை சிவி சண்முகம் விரும்பவில்லை. அதேபோல் அண்ணாமலையும் சிவி சண்முகத்தை மூன்றாம் கட்ட தலைவர் என்று கூறினார். இதற்கு எடப்பாடி எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. சிவி சண்முகத்திற்கு ஆதரவாக எதுவும் சொல்லவில்லை. இந்த கோபம் எல்லாம் சிவி சண்முகத்திற்கு இருக்கிறது. இதன் காரணமாக கோபத்தில் சிவி சண்முகம் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு தனியாக வந்தார்.

மனக்குறை
கேள்வி: சிவி சண்முகத்திற்கு கோபம் இருக்கிறது என்றால்.. அவர் நேரடியாக போய் எடப்பாடியிடமே தனது மனக்குறைகளை பேசி இருக்கலாமே?
பதில்: எடப்பாடியிடம் போய் பேசினாலும் அவர் கேட்க மாட்டார் என்று சிவி சண்முகம் நினைக்கிறார். தங்கமணி, வேலுமணி கட்டுப்பாட்டில் எடப்பாடி இருக்கிறார். தங்கமணி, வேலுமணி இருவரையும் பாஜகவோடுதான் அதிமுக செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால்தான் சிவி சண்முகம் சொல்வதை எடப்பாடி கேட்பது இல்லை. சிவி சண்முகத்திற்கு எடப்பாடி வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவில்லை. பாஜகவை வெளிப்படையாக எதிர்க்கும் மனநிலைக்கு இன்னும் எடப்பாடி வரவில்லை. முதலில் அதிமுகவில் தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொள்வோம்.

தேர்தல் பிளான்
அதன்பின் கூட்டணி பற்றி யோசிக்கலாம் என்று எடப்பாடி நினைக்கிறார். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இப்போதே பாஜகவை எதிர்க்க வேண்டாம் என்று எடப்பாடி நினைக்கிறார். இதனால் சிவி சண்முகம் பேச்சுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ எடப்பாடி பேசவில்லை. இன்னொரு பக்கம் சிவி சண்முகத்திற்கு பிளான் பி ஒன்று இருக்கிறது. பாஜகவுடன் செல்ல வேண்டாம் என்பது பிளான் ஏ. எடப்பாடி இடத்திற்கு சிவி சண்முகம் குறி வைக்கிறார். தன்னிடம் எம்பி பதவி உள்ளது. வட மாவட்டங்களில் எம்எல்ஏக்கள் சப்போர்ட் உள்ளது.

பிளான் பி
ஒருவேளை எடப்பாடி கொடநாடு வழக்கு உள்ளிட்ட ஏதேனும் வழக்கில் ஜெயிலுக்கு போனால், எடப்பாடி இடத்தை தான் பிடிக்க வேண்டும் என்று சிவி சண்முகம் நினைக்கிறார். அதுதான் பாஜகவின் பிளான் பி. சிவி சண்முகம் தன்னுடைய பக்கத்தை பலப்படுத்தி வருகிறது. வட மாவட்டங்களில் பவர் பாலிடிக்ஸை அவர் ஆரம்பித்துவிட்டார். எடப்பாடி ஏதாவது வழக்கில் மாட்டினால் தங்கமணி, வேலுமணி கைக்கு கட்சி போக கூடாது என்பதில் சிவி சண்முகம் தீவிரமாக இருக்கிறார். இதற்கான வேலைகளை செய்து வருகிறார். இதுதான் சிவி சண்முகத்தின் திட்டம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications