அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.. சிவி சண்முகம்
சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்தியற்காக சசிகலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சசிகலா கொரோனா தொற்றிலிருந்து மீண்டு நெகட்டிவ் என வந்த நிலையில் இன்று அவர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் மருத்துவமனையிலிருந்து ரிசார்ட்டுக்கு சென்றார்.

இதை அதிமுக நிர்வாகிகள் கண்டித்தனர். அதிமுக உறுப்பினரே அல்லாத ஒருவர் அதிமுக கொடியை எப்படி பயன்படுத்தலாம் என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா என்பதால்தான் அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சசிகலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் கடந்த 30 ஆண்டுகளாக சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அதிமுகவை ஏமாற்றி விட்டனர்.
இனியும் அது நடக்காது. அடிப்படை உறுப்பினரே இல்லாத ஒருவர் எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என கேள்வி எழுப்பிய சண்முகம், சசிகலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications