எடப்பாடியை மிரட்டும் சிவி சண்முகம்? தேஜஸ் ரயிலில் நடந்தது என்ன? என்ன ஓபிஎஸ் கேம்ப் இப்படி சொல்லுதே?
சென்னை: எடப்பாடியை சிவி சண்முகம் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். எடப்பாடியை மிரட்டித்தான் சிவி சண்முகம் பதவி வாங்கினார். அந்த அளவிற்கு எடப்பாடி ஒரு டம்மி பீஸ் என்று ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் சென்னை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக உட்கட்சி மோதல் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டு இருக்கிறது. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் நிலவி வருகிறது. இது தொடர்பாக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட திட்டம் என்ன? அதிமுக உட்கட்சி மோதலில் இனி என்ன நடக்கும் என்று ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி அளித்துள்ளார். ஒன்இந்தியா அரசியலுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு..

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
கேள்வி: ஓபிஎஸ் -கிட்ட இருப்பது அதிமுக அல்ல சின்ன குழுதான் என்று எடப்பாடி தரப்பு சொல்லி வருகிறதே?
பதில்:
தர்மயுத்தம் காலத்தில் எங்களுக்கு 45 சதவிகித வாக்குகள் இருந்தது. ஆனால் அதன்பின் எடப்பாடி - ஓபிஎஸ் இருவரையும் தந்திரமாக சேர்த்து ஏமாற்றிவிட்டனர். ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக்கொண்டு எடப்பாடியும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை தன் பக்கம் வளைத்துவிட்டார். கேபி முனுசாமி ஓபிஎஸ் முதுகில் குத்திவிட்டார். தர்மயுத்தத்தில் ஓபிஎஸ் பக்கம் இருந்தவர்களை எடப்பாடி தன் பக்கம் இழுத்து தற்போது ஏமாற்றிவிட்டார். எடப்பாடி சொன்னது ஒன்று செய்தது ஒன்று. ஓபிஎஸ் நம்பித்தான் தர்மயுத்தத்திற்கு பின் எடப்பாடியுடன் இணைந்தார். ஆனால் எடப்பாடி ஏமாற்றிவிட்டார்.

பொதுக்குழு
கேள்வி: ஓபிஎஸ் பௌதுக்குழுவை கூட்ட போவதாக சொல்கிறார்களே? யாரை வைத்து கூட்டுவார்?
பதில்: யாரை வைத்தா.. கண்டிப்பாக அவர் பொதுக்குழுவை கூட்டுவார். ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். வெறும் 2000 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அவர் பொதுக்குழுவை கூட்டலாம். நாங்கள் ஒன்றரை கோடி தொண்டர்களை வைத்துக்கொண்டு பொதுக்குழுவை கூட்ட கூடாதா?

வைகை செல்வன்
கேள்வி: நீங்கள் தொண்டர்கள் ஓபிஎஸ் வசம் உள்ளனர் என்று சொல்வது போலவே.. ஜெயக்குமார், வைகை செல்வன் போன்றவர்களும் எடப்பாடி பக்கமும் தொண்டர்கள் உள்ளனர் என்கிறார்களே?
பதில்:
வைகை செல்வன் என்ன பேசினார் தெரியுமா? திண்டுக்கல்லில் இருந்து தேஜஸ் ரயிலில் சென்னைக்கு வைகை செல்வன் வந்தார். அப்போது நானும் உள்ளே இருந்தேன். அப்போது வைகை செல்வன் எடப்பாடியை எவ்வளவு மட்டமாக பேசினார் தெரியுமா? வைகை செல்வன் எடப்பாடியை திருடன் என்று பேசினார். ஜெயக்குமாரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது மோசமாக பேசிய வைகை செல்வன்தான் இப்போது எடப்பாடியை பாராட்டி பேசுகிறாரா? என்ன நியாயம் இது?

ஓபிஎஸ்
இவர்கள் எல்லாம் ஆதாயத்திற்காக ஓபிஎஸ் பக்கத்தில் இருந்து எடப்பாடி பக்கம் வந்துள்ளனர். பலரால் எடப்பாடியை சமாளிக்க முடியாமல் அவர் பக்கம் சேர்ந்து உள்ளனர். எடப்பாடியை சமாளிக்க முடியாததால் தான் அவர் பக்கம் சேர்ந்துள்ளனர். எடப்பாடி பக்கம் இருப்பவர்கள் எல்லாம் காலாவதியானவர்கள். அவர்கள் அதிமுகவை ஜாதி ரீதியாக கொண்டு செல்ல பார்க்கிறார்கள். அதிமுகவில் 10.50 சதவிகித ஒதுக்கீடு வந்ததற்கு காரணமே சிவி சண்முகம், கேபி முனுசாமிதான். இதுதான் அதிமுக தோல்விக்கு காரணம். இவர்கள் இருவர்தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம்.

சிவி சண்முகம்
கேள்வி: சிவி சண்முகம் அதிமுகவிலும், வடமாவட்டங்களிலும் மிகவும் வலிமையான தலைவராக இருக்கிறாரே?
பதில்: சிவி சண்முகம் பகலில் பவராக இருப்பார். 5 மணிக்கு பின்னர் வேறு பவரோடு இருப்பார். எடப்பாடியை மிரட்டித்தான் சிவி சண்முகம் பதவி வாங்கினார். யோவ் இங்க வாயா என்று எடப்பாடியை சிவி சண்முகம் மிரட்டி வருகிறார். தெரியுமா? அந்த அளவிற்கு எடப்பாடியை சிவி சண்முகம் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். அந்த அளவிற்கு எடப்பாடி ஒரு டம்மி பீஸ். எடப்பாடி நினைத்தால் ஒரு 5 மாவட்ட செயலாளர்களை நீக்க முடியுமா? முடியாது. எல்லோருக்கும் ஆமாம் சாமி போட்டு, அவரின் நிலைமை மோசமாகி உள்ளது. இரட்டை இலையை நாங்கள் மீட்போம். அதுதான் எங்கள் சின்னம்.

ஓபிஎஸ் என்ன சொல்கிறார்
கேள்வி: அதிமுக இப்படி உடைந்து கிடப்பது திமுகவிற்கு தானே சாதகம்?
பதில்:
இதைத்தானே ஓபிஎஸ் சொல்கிறார். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்கிறார். இடையில் குறுக்கே வந்தவர்கள்தான் எடப்பாடி டீம். அவர்கள்தான் அதிமுகவை கபளீகரம் செய்ய பார்க்கிறார்கள். ஓ பன்னீர்செல்வத்தை தனது கூடவே வைத்து இருந்தவர் ஜெயலலிதா. ஓ பன்னீர்செல்வத்தை அதிகம் நம்பியவர் யார்? ஜெயலலிதா தானே? கட்சியில் அத்தனை பேர் இருக்க ஓ பன்னீர்செல்வத்திற்கு தானே ஜெயலலிதா முதல்வர் பதவி கொடுத்தார்.

பாஜக பிளான்
கேள்வி: ஓபிஎஸ் - இபிஎஸ் சேர்ந்து இருக்க வேண்டும் என்று பாஜக நினைப்பதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்களே?
பதில்: எந்த கால கட்டத்திலும் எடப்பாடியை நாங்கள் சேர்த்துக்கொள்ள மாட்டோம். எடப்பாடி எங்கள் அணியில் இருக்க மாட்டார். எடப்பாடி இல்லாத அதிமுகதான் இனி. எடப்பாடி உடன் இருந்தவர்களை ஏற்றுக்கொள்வோம். அவருடன் இருந்தவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வோம். ஆனால் எடப்பாடியை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எல்லாம் முடிந்துவிட்டது, என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications