"தலையை வெட்டி தொங்கவிட்டுடுவோம்".. முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்திற்கு கொலை மிரட்டல்
சென்னை: முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்திற்கு வாட்ஸ் ஆப் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுகவில் முன்னாள் சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் சி வி சண்முகம். விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். அது மட்டுமல்லாமல் ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா பக்கம் இருந்த சிவி சண்முகம் தற்போது சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார்.

23 தீர்மானங்கள்
கடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் கூட 23 தீர்மானங்களையும் பொதுக் குழு நிராகரிப்பதாக கூறி ஆவேசமாக பேசியிருந்தார். மேலும் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த போது, தீர்மானங்களை பொதுக் குழு நிராகரித்துவிட்டதால் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் பதவிகள் காலாவதியாகிவிட்டன.

11 ஆம் தேதி பொதுக் குழு
வரும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக் குழு கூடும். அப்போது அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்வோம் என்றார். இந்த நிலையில் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு சிவி சண்முகத்தின் வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்து ஒரு புகார் அளித்தார். அதில் தனது கிளைண்ட் சிவி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.

செல்போனுக்கு கொலை மிரட்டல்
அவரது செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாக மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் கடந்த மே மாதமும் இது போன்றதொரு புகார் எழுந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளோம் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தலையை வெட்டிவிடுவோம்
தலையை வெட்டி தொங்கவிடுவோம் என மர்ம நபர்கள் மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை குறித்து சிவி சண்முகம் தீவிரமாக இருந்து வரும் நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications