குடியுரிமை சட்ட போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
Recommended Video
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியில் படித்து வந்த ஜெர்மன் மாணவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னை ஐஐடியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஜெர்மனியை சேர்ந்த மாணவர் ஜேக்கப் லின்டென்தலும் பங்கேற்றார்.

அப்போராட்டத்தில் 1933 முதல் 1945 வரை நாஜி ஜெர்மனியில் சித்ரவதையை அனுபவித்ததை சுட்டிக்காட்டும் பதாகையை அவர் கையில் ஏந்தி இருந்தார். அவரது இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து ஜேக்கப்பிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர் ஜேக்கப் லின்டென்தல் நாட்டை விட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனால் அவர் உடனடியாக நேற்றே ஜெர்மனுக்கு புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவம் குறித்து ஜேக்கப் லின்டென்தல் கூறுகையில், பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய என்னிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
It is learnt that Jakob Lindenthal, an exchange student at @iitmadras, from Dresden Germany, is asked to leave India asap. Recently he joined #CAA_NRCProtests in Chennai. pic.twitter.com/ZeS8h6ibfR
— Jinoy Jose Palathingal (@jinoyjosep) December 23, 2019
அப்போது என்னுடைய அரசியல் சார்பு உள்ளிட்டவை குறித்தும் கேள்வி எழுப்பினர். இந்த விசாரணையின் முடிவில் விசா விதிகளை மீறியதால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
சட்ட ரீதியான ஒரு போராட்டத்தில், அடிப்படை மனித உரிமைகளுக்கான போராட்டத்தில்தான் தாம் பங்கேற்றதாக விளக்கம் அளித்தேன். இதனை அதிகாரிகள் ஏற்கவில்லை.
இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான உத்தரவை தருமாறு கேட்டிருதேன். அவர்களும் தருவதாக கூறி இருந்தனர். ஆனால் எழுத்துப்பூர்வமான உத்தரவை அவர்கள் கொடுக்கவில்லை. இதனையடுத்து ஜெர்மனிக்கு திரும்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications