Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சரவையிலும் இடம் கிடைக்கும்.. பிரேமலதா சொன்னதுமே திகைத்த அரசியல் களம்.. தேமுதிக கூட்டணி யாருடன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே பேசப்பட்டது. அது ஒரு புறம் இருந்தாலும், இப்போது நடைபெறுவது சட்டப்பேரவை தேர்தல் என்பதால் எங்களுடைய முழு கவனமும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கித் தான் இருக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.. மேலும் யாருடன் கூட்டணி என்பது குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.

இன்றைய அரசியல் சூழலில், தேமுதிக எவ்வளவு பலம் வாய்ந்த கட்சி என்பதைக் காட்டிலும், அது எந்த அணியை தேர்வு செய்யப் போகிறது என்பதே முக்கியமான விஷயமாக மாறியுள்ளது.

DMDK Premalatha Vijayakanth Cabinet Berth TamilNadu Politics

காரணம், அரசியல் மேடை இப்போது தெளிவாக இரண்டு பக்கமாக பிரிந்திருக்கிறது. ஒரு பக்கம் திமுக தலைமையிலான ஆளும் கூட்டணி. மறுபக்கம் அதிமுக - பாஜக இணைந்த எதிர்க்கூட்டணி. இந்த இரண்டிற்கும் நடுவில் நிற்கும் தேமுதிக, தேர்தல் கணக்கில் ஒரு முடிவெடுக்கும் சக்தியாக பார்க்கப்படுகிறது.

திமுக, அதிமுக

இதில், திமுக தரப்பு ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது. அதிமுகவும் பாஜகவும் முழுமையாக ஒன்றிணைந்து, அதனுடன் தேமுதிக போன்ற கட்சி சேர்ந்தால், அது தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு பெரிய சவாலாக மாறும். குறிப்பாக, மறைந்த விஜயகாந்தின் நினைவும், அவருக்கிருந்த கிராமப்புற ஆதரவும் இன்னும் மக்களிடையே உயிருடன் இருப்பதை திமுக நன்கு அறிந்துள்ளது. அதனால்தான் தேமுதிக அந்த எதிர் அணிக்கு செல்லாமல் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் அந்த கூட்டணியில் இருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு உரிய தொகுதிகள், அரசியல் மரியாதை, எதிர்கால பாதுகாப்பு போன்ற விஷயங்களை எதிர்பார்க்கின்றன. இந்த சூழலில், தேமுதிக விரும்பும் அளவுக்கு சீட்களை திமுக வழங்குவது நடைமுறையில் கடினமான விஷயமாகவே தெரிகிறது.

தேமுதிக தனித்த அடையாளம்

மற்றொரு பக்கம், திமுக கூட்டணியில் சேர்ந்தால் தேர்தல் வெற்றி சாத்தியமெனினும், தேமுதிக தனது தனித்த அடையாளத்தை மெதுவாக இழக்கும் அபாயமும் இருக்கிறது. தேமுதிக வெறும் சீட்கள் மட்டுமல்ல, மாநிலங்களவை உறுப்பினர் பதவி, கட்சியின் நீண்டகால பாதுகாப்பு, தேசிய அரசியலில் இடம் போன்ற விஷயங்களையும் கணக்கில் வைத்தே முடிவு எடுக்க முயல்கிறது.

இந்த அனைத்தையும் சேர்த்து பார்க்கும்போது, தற்போதைய சூழலில் தேமுதிக, அதிமுக - பாஜக தலைமையிலான கூட்டணியை நோக்கி செல்லும் வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சீட் பகிர்வு, தேர்தல் செலவுகள், பிரச்சார வேலைப்பாடுகள் என பல அம்சங்களில் அந்த கூட்டணி தேமுதிகவுக்கு ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும் என்ற கணக்கே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

பிரேமலதா கூட்டணி பேச்சு

இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்றைய தினம் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறது... அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மாவட்ட செயலாளர்களிடம், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு படிவம் கொடுக்கப்பட்டு, அதில் திமுக, அதிமுக, தவெக, மற்றவை என ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு அதில் ஒன்றை தேர்வு செய்து அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படியே, மாவட்ட செயலாளர்களின் கருத்து தெரிவிப்பு படிவங்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் பெறப்பட்டது.. இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசினார்..

ராஜ்ய சபா சீட்

அதில். "தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துகளை கேட்டுள்ளோம். அவர்களின் கருத்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் கருத்தாக இருக்கும். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும்.

ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கெனவே பேசப்பட்டது. அது ஒரு புறம் இருந்தாலும், இப்போது நடைபெறுவது சட்டப்பேரவை தேர்தல் என்பதால் எங்களுடைய முழு கவனமும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கித் தான் இருக்கும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவது இயல்பான ஒன்று தான். இவை தேர்தலுக்காகவா என்று கேட்டால் எந்த ஆட்சியாக இருந்தாலும் இது தான் நடக்கும். திமுக கொடுத்த வாக்குறுதியில் 50 சதவீதம் நிறைவேற்றி உள்ளனர், இன்னும் 50 சதவீதம் நிறைவேற்றவில்லை. சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

அனைத்துக் கட்சிகளுமே தேமுதிகவுக்கு தோழமைக் கட்சிகள் தான். அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள், தேமுதிகவை வரவேற்கிறார்கள். உரிய நேரத்தில் சரியான முடிவை நாங்கள் எடுப்போம்.

அமைச்சரவையில் அங்கம்

எப்படி பார்த்தாலும் வரும் தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்கும், மக்கள் விரும்பும் அணி நிச்சயம் வெற்றி பெறும்... ஆட்சியில் பங்கு என்ற கருத்து தற்போது ஓங்கி ஒலிக்க துவங்கிவிட்டது.. அந்தவகையில் கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளது.

திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி,, எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆளும் கட்சியை விமர்சிப்பது இயல்பான ஒன்று. இந்த நிமிடம் வரை எந்தக் கூட்டணியும் உறுதியாகவில்லை. தற்போது கூட்டணியில் உள்ளவர்கள் வெளியேறலாம், புதிய கட்சிகள் கூட்டணிகள் அமைக்கலாம்" என்றார்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+