Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தி எதுக்கு? இங்கிலீஷ் போதுமே! கவனம் பெற்ற டைரி மில்க் சாக்லேட் விளம்பரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் மும்மொழிக்கொள்கை பற்றிய பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது. குறிப்பாக தென் மாநிலங்கள் மூன்றாவது மொழியை கற்க வேண்டும் எனும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் காட்பரி டைரி மில்க் சாக்லேட் நிறுவனத்தின் விளம்பரம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நாட்டில் நடக்கும் முக்கியமான விஷயங்களை மையப்படுத்தி 'அமுல்' (Amul) நிறுவனம் வெளியிடும் நையான்டி விளம்பரங்கள் ஒரு காலத்தில் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. தற்போது அந்த இடத்திற்கு டைரி மில்க் நகர்ந்திருக்கிறது.

NEP national education

புதிய கல்விக்கொள்கை:

புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்திற்கான கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் காட்டமாக கூறியிருந்தார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு தமிழும், ஆங்கிலமும் பயிற்று மொழியாக இருக்கிறது. வேறு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவோர் தனியார் பயிற்சி மையத்தில் பணம் கொடுத்து கற்றுக்கொள்கிறார்கள்.

ஆக தமிழகத்தில் உங்களால் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் மூன்றாவதாக ஒரு மொழி அரசு கற்பிக்க வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. இதுதான் பிரச்சனை என தமிழக அரசு சண்டை செய்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல கேரளாவும் கூட மும்மொழி எதற்கு என கேள்வி எழுப்பியிருக்கிறது.

கேரளா:

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய கேரள அமைச்சர் ஜான் பிரிட்டாஸ், "தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் கல்வியறிவில் நல்ல முன்னேற்றத்தை கொண்டிருக்கின்றன. தேசிய சராசரியை விட இங்கு கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி இருக்கையில் வட மாநிலங்களை, கல்வியில் பின்தங்கியிருக்கும் மாநிலங்களை மையப்படுத்தி கொண்டுவரப்பட்ட மும்மொழிக்கொள்கை திட்டத்தை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்? அது தென்மாநிலங்களுக்கு எப்படி பொருந்தும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு:

அதேபோல மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "ஹிந்தியை வளர்க்கவே மத்திய அரசு இந்த கல்விக்கொள்கையை அமல்படுத்த துடிக்கிறது. நாங்கள் இதை ஏற்கமாட்டோம். இதனால் தமிழகத்திற்கு வரவேண்டி ரூ.2000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. ரூ.10,000 கோடி கொடுத்தாலும் நாங்கள் இதை ஏற்க மாட்டோம். எங்களுக்கு வர வேண்டிய நிதி வராததால் சுமார் 43 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.

ஆனால் மத்திய அரசும், தமிழக பாஜக தலைவர்களும் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இப்படியான பஞ்சாயத்துக்கு நடுவில்தான் கேட்பரிஸ் டைரி மில்க் சாக்லேட்டின் விளம்பரம் கவனம் பெற்றிருக்கிறது.

விளம்பரம்:

விளம்பரத்தில்.. வடமாநிலத்திற்கு சென்னையை சேர்ந்த குடும்பம் ஒன்று புதியதாக குடிபெயர்கிறது. குடியிருப்பில் உள்ள பெண்கள் மாடியில் அமர்ந்து சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்நேரத்தில் சென்னையை சேர்ந்த பெண் வருகிறார். இவர்கள் இந்தியில் அப்பெண்ணை வரவேற்க.. அவரோ எனக்கு ஹிந்தி கொஞ்சமாகத்தான் வரும் என தயங்கி சொல்கிறார். சரி புதியதாக ஒருவர் வந்தாகிவிட்டது. அவரையும் இணைந்துக்கொண்டு சுவாரசிய பேச்சை தொடர வேண்டும்! என்ன செய்வது?

சென்னை பெண்:

கூட்டத்தில் இருக்கும் பெண் ஒருவர் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேச தொடங்குகிறார். LKG குழந்தைகளின் ஆங்கிலம் அது. கைகளை அசைத்து, கண்களை உருட்டி, கழுத்தை ஆட்டி பாதி ஆங்கிலத்திலும், பாதி உடல் மொழியிலும் சுவாரசிய பேச்சை தொடர்கிறார். அது எல்லோருக்கும் புரிய தொடங்குகிறது. தமிழ் பெண்ணுக்கும் புரிகிறது. எல்லோரும் அந்த பேச்சை கேட்டு சிரிக்கிறார்கள். கலாய்ப்பதற்காக சிரிக்கவில்லை.. சுவாரசிய பேச்சில் வரும் காமெடிக்காக சிரிக்கிறார்கள்.

அந்த நேரத்தில் ஆங்கிலத்தில் பேசிய பெண் டைரி மில்க் சாக்லேட்டை நீட்ட.. தமிழ் பெண் அதை வாங்கி பகிர்ந்துக்கொடுத்து சாப்பிடுகிறார்.

இந்த விளம்பரத்தை தமிழகத்தை சேர்ந்தவர்கள் வரவேற்க தொடங்கியுள்ளனர். இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பது சிறந்ததுதான் என்றும் கூறுகிறார்கள்.

இணைப்பு மொழி:

"பானி பூரி சாப்பிடவோ? திட்டிய ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொள்ளவோ இந்தி தேவையில்லை! அவ்வளவு ஏன்? சென்னையில் இருந்து வட மாநிலத்தில் வாழ சென்றால் கூட இந்தி மொழி அவசியமில்லை என்பதை தான் இந்த விளம்பரம் உணர்த்துகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து இந்திய மக்களையும் இணைக்க இணைப்பு மொழியாக ஆங்கிலம் போதுமானது.

எந்த மொழியையும் அழிக்க வேண்டாம். மொழியில் உயர்வு தாழ்வு வேண்டாம் என்பதை தங்கள் விளம்பரத்தின் மூலம் காட்பரிஸ் நிறுவனத்தினர் அசத்தியிருக்கிறார்கள்" என ஜாக்கிசேகர் எனும் x தள பயனர் கூறியிருக்கிறார்.

டைரி மில்க் விளம்பரம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே? உங்கள் கருத்தை பகிருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+