மதிமுக வளர்ச்சிக்கு 17 ஆண்டுகளாக மாதம் ரூ.100 நன்கொடை! தொண்டரை கைவிடாத துரை வைகோ!
சென்னை: மதிமுக வளர்ச்சிக்கு கடந்த 17 ஆண்டுகளாக மாதம் ரூ.100 நன்கொடை வழங்கி வரும் தொண்டர் பற்றி அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல அந்த தொண்டரின் மகளுக்கு அமைச்சரிடம் பேசி பணி மாறுதலும் பெற்றுக்கொடுத்திருக்கிறார் துரை வைகோ. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்டவர் ஜெயராமன். 80 வயதை கடந்து இருந்தாலும் தலைவர் வைகோ மீது கொண்ட பற்று காரணமாக அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு கொள்வார். அரசுப் பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையிலும் 2006 முதல் இன்று வரையிலும் மாதந்தோறும் கழக வளர்ச்சிக்காக 100 ரூபாயை வழங்கி முறைப்படி அதற்கான ரசீதையும் பெற்று கொள்பவர்.

தலைவர் வைகோ அவர்களை சந்திக்க முடியாத மாதங்களில் அதனையும் சேர்த்து அடுத்த மாதங்களில் தவறாமல் இன்று வரை வழங்கி வருகிறார்.
கடந்த மாதம் 29 ம் தேதி என்னையும் தலைவர் அவர்களையும் சந்தித்து அவரது மகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பணியில் இருப்பதாகவும், சில காரணங்களால் அவரால் அங்கு பணிக்கு செல்ல முடியவில்லை என்றும், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கிருந்து பணி மாறுதல் பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நான் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தாலும், அதற்கு முன்னதாக தலைவர் வைகோவிடமும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் பேசி ஒப்புதல் பெற்று விட்டு தற்போது நான் வெளிநாட்டில் இருந்து கொண்டே இது தொடர்பாக தொடர்ந்து அமைச்சரிடம் பேசி அதற்கான பணி மாறுதல் ஆணையை பெற்று கொடுத்து விட்டேன்.
இத்தனை ஆண்டு காலம் வைகோ அவர்கள் காட்டிய திசையில் தடம் பிறழாமல் பயணம் செய்து கருப்பு துண்டை எந்நேரமும் தாங்கி பிடிக்கும் கொள்கை குணம் கொண்ட தொண்டரின் குடும்பத்திற்கு என்னால் இயன்ற உதவியை செய்து கொடுத்ததில் மனநிறைவு அடைகிறேன்.''
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications