தமிழகம் திரும்புகிறார் சசிகலா.. 57 இடங்களில் உற்சாக வரவேற்பு கொடுக்க தொண்டர்கள் ரெடி
சென்னை: 4 ஆண்டுகள் கழித்து சென்னை வரும் சசிகலாவுக்கு இன்று வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா திங்கட்கிழமை காலை சென்னை திரும்புகிறார். தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுக 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார். சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சுவரொட்டிகள்
சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் தங்க உள்ள சசிகலா அங்கேயே தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார்.

ஜெயலலிதா
மேலும், சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதுடன், அதிமுக தலைமையகம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, சசிகலாவை வரவேற்று அழைத்து வருவதற்காக அமமுக பொதுசெயலாளர் தினகரன், அமமுக நிர்வாகி பழனியப்பன் உள்ளிட்டோர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.

சதி திட்டம்
ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு அமைச்சர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்று கேள்வியெழுப்பிய தினகரன், ஆளுங்கட்சியினர் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டுவதாகவும் அச்சம் தெரிவித்தார். அதேநேரம் சசிகலா தமிழகம் திரும்புவதால் அதிமுகவினர் பதற்றமடையவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் விமர்சனம்
சசிகலா சிறையில் இருந்தபோது தினகரன் அவரது சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டதாகவும், தற்போது சசிகலா கணக்கு கேட்பார் என்ற பதற்றத்தில் தினகரன் இருப்பதாகவும் அமைச்சர் விமர்சித்தார். இந்நிலையில், சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் கட்டுப்பாடு
அதிமுக தலைமையகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாலையின் இருமுனைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் புதிதாக 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
வேதா இல்லம், பின்னி சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைகளிலும் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள போதிலும், அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications