"ரெட் டேப்.." சென்னை நெடுஞ்சாலை பணிகள்.. நிலைமை ரொம்பவே மோசமாம்! சிஏஐி கொடுத்த பரபர அலர்ட்
சென்னை: தலைநகர் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை பணிகள் குறித்து சிஏஐி ரெட் டேப் அலர்ட் கொடுத்துள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளும் சாலைப் பணிகள் அதிலும் குறிப்பாக நெடுஞ்சாலை பணிகள் பல சமயம் நீண்ட தாமதம் அடைவதையே வாடிக்கையான ஒன்றாக வைத்துள்ளது. இதனால் நாட்டின் வளர்ச்சியும் கூட பாதிக்கப்படுகிறது.

இதற்கிடையே இதுபோன்ற காலதாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நாட்டின் முக்கிய பொருளாதார வழித்தடங்களை மேம்படுத்த பாரத்மாலா என்ற திட்டத்தைக் கையில் எடுத்தது.
ரெட் டேப்: கடந்த 7 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இந்த பாரத்மாலா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இப்போது இது தணிக்கை செய்யப்பட்ட முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில் சென்னையை மற்ற தமிழக மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவை இணைக்கும் மூன்று முக்கிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் இன்னும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிஏஐி ரெட் டேப் கொடுத்துள்ளது.
இதில் சென்னை- மதுரை நெடுஞ்சாலை (93 கிமீ), சென்னை-பெங்களூரு (158 கிமீ) மற்றும் சென்னை-சேலம் (277 கிமீ) எட்டு வழிச்சாலைப் பணிகள் அடங்கும். இது தொடர்பாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் பணிகளுக்கு முன்னுரிமை தரப்பட்ட போதிலும் இந்த முக்கிய சாலைப் பணிகளை எப்போது முடிக்க வேண்டும் என்பதற்கு எந்தவொரு காலக்கெடுவும் பரிந்துரைக்கப்படவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்: இருப்பினும், இந்த சிஏஜி அறிக்கைக்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதுவரை எந்தவொரு பதிலைச் சமர்ப்பிக்கவில்லை. தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலைகளைப் பயன்படுத்துகின்றன. இருந்த போதிலும் இந்த நெடுஞ்சாலை விரிவாக்கம் தாமதமாகியுள்ளது.
இந்த தாமதத்திற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது.. தனியார் நிலத்தைக் கையகப்படுத்துதல், டெண்டர் செயல்முறை, மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை தான் இந்தத் தாமதத்திற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
காரணம்: இது தொடர்பாக வல்லுநர்கள் மேலும் கூறுகையில் "சமூக பொருளாதார வளர்ச்சிக்குப் போக்குவரத்து தான் முக்கியமானது.. சாலை விரிவாக்கப் பணிகளைத் தள்ளிப்போடுவது நிச்சயமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும்.. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து பயணத்தைப் பாதுகாப்பு இல்லாத ஒன்றாக மாற்றுகிறது. மேலும், சரக்கு எடுத்து வருவதில் செலவு அதிகரிக்கும் போது விலைவாசி உயர்வுக்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
இப்போது தமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நிகழ்கிறது. இந்தளவுக்கு விபத்துகள் அதிகமாக நடக்கும் போதிலும், விபத்துக்குள்ளான பகுதிகளைச் சரிசெய்யும் பணிகளும் கூட மந்தமாகவே உள்ளதாகக் கடந்த வாரம் வெளியான மற்றொரு சிஏஐி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பணிகள்: கடந்த 2011 முதல் 2018 வரை சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 263 விபத்து பிளாக் ஸ்பாட்கள் கண்டறியப்பட்டன. இந்த இடங்களில் தான் அதிக விபத்துகள் நடந்துள்ளன. இதில், ஒன்பது இடங்கள் மட்டுமே நிரந்தரமாகச் சரி செய்யப்பட்டுள்ளது. 74 இடங்களில் குறுகிய கால நடவடிக்கைகள் மட்டும் எடுத்துள்ளன. மற்ற இடங்களில் பணிகள் முடிக்க இன்னும் ஓராண்டு ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டு உள்ளிட்ட எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளும் சென்னை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் இல்லை. இதனால் சென்னை- திண்டிவனம் சாலையில் வேகமாக ஓட்டுவது வழக்கமாகிவிட்டது.. அங்குக் கடந்த வாரம் மட்டும் நான்கு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் மோசமான பராமரிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலைப்பட்டாலும், பெரிதாக மாறவில்லை. கட்டுமானப் பணிகள் நடக்கும் சந்திப்புகள் பள்ளங்கள் அல்லது பள்ளங்களால் நிறைந்துள்ளன. இதுகுறித்து சிங்கபெருமாள் கோயிலைச் சேர்ந்த ஜி கணேஷ் கூறுகையில், "சென்னை-மதுரை நெடுஞ்சாலையில் ஓராண்டாகத் தெருவிளக்குகளைச் சீரமைக்கக் கூட என்ஹெச்ஏஐ தயாராக இல்லை.












Click it and Unblock the Notifications