மே 19ல்தான் தேர்தல்.. 4 சட்டசபை தொகுதிகளில் நாளை முதல் பிரச்சாரம் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: லோக்சபா தேர்தல் முடியும் வரை அரவக்குறிச்சி உட்பட 4 சட்டசபை இடைத் தேர்தல் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு, ஏப்ரல் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, நாளை மாலை 6 மணியுடன் இத்தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்கிறது.

இதனிடையே, மே 19ம் தேதி இடைத் தேர்தல்களை சந்திக்கும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் கூட நாளை மாலை 6 மணி முதல், ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடையும் வரை பிரச்சாரம் செய்ய கூடாது என தமிழக தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன்பிறகு அந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்து கொள்ளலாம்.
எனவே, நாளை மாலை முதல் ஏப்ரல் 18ம் தேதி மாலைவரை, 4 தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால லீவு கொடுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரம் பிற தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் தேர்தல் ஆணையம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications