கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: ஒரே வீட்டில் இரு பெண்கள் ஓய்வூதியம், உரிமைத் தொகை பெறலாமா?
சென்னை: ஒரே வீட்டில் இருக்கும் இரு பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் உரிமைத் தொகையையும் மாத ஓய்வூதியத்தையும் பெற முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு விடியல் பயணம் என்ற பெயரில் இலவச பயணத்தை கொண்டு வந்தது. அது போல் பெண்களின் வங்கிக் கணக்கில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ 1000 செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் 1.14 கோடி பெண்கள் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஜூன் 4ஆம் தேதி 9 ஆயிரம் முகாம்கள் மூலம் கலைஞர் உதவித் தொகை பெறாதவர்கள் தகுதியிருப்பின் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்காக விண்ணப்பங்கள் அன்றே வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெண்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதையடுத்து அவற்றின் மீது பரிசீலனை நடந்து தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
கடந்த ஆண்டு முதலே 3 முறை முகாம்கள் நடத்தப்பட்ட நிலையிலும் தற்போதும் இந்த திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பெண்களிடம் உள்ளன. கலைஞர் உரிமைத் தொகை பெற வேண்டும் என்றால் வீட்டில் யாரும் முதியோர் உதவித் தொகை பெறக் கூடாது.
ரேஷன் கார்டில் முதியோர்கள் பெயர் இருந்தால் அவர்களுக்கு மாத உதவித் தொகை கிடைப்பதால் தங்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காது என பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ரேஷன் கார்டில் இருந்து முதியவர்களின் பெயர்களை நீக்குவதற்கும் விண்ணப்பிக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக அரசு பல முறை விளக்கம் அளித்துவிட்டது. அதாவது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிமுறைகளிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் இருக்கும் முதியவர்கள் தமிழக அரசு வழங்கும் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் பெற்றால் அவர்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காது.
அதாவது ஓய்வூதியம் பெறும் முதியோர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. அதே நேரத்தில் இந்த வீட்டில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இருந்தால் அவர்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே அரசு விதிகளின்படி ஒரு வீட்டில் மூதாட்டி ஓய்வூதியம் பெறவும், உரிமைத் தொகை பெற தகுதியான பெண் உரிமை தொகையையும் பெறலாம்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications