தமிழ்நாட்டில் ஒரு அதிசய பையன்.. பிறக்கும் போது 5 கிலோ.. 9 நாளிலேயே நடந்தாராம்.. வீடியோவை பாருங்க
சென்னை: ஒரு பையன் பிறந்த 9 நாளிலேயே தான் நடந்துவிட்டதாக கூறியிருக்கிறார். பிறக்கும் போது தான் 5 கிலோ இருந்ததாகவும், 9 நாளிலேயே நடந்துவிட்டதாகவும் பிரசங்கத்தின் போது கூறியுள்ளார். இந்த வீடியோ சமுக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
பொதுவாக புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எடை 2500 கிராம் முதல் 4000 கிராம் வரை தான் காணப்படும். இந்தியாவில் இரண்டரை கிலோ முதல் 3 கிலோ வரை குழந்தைகளின் எடை இருக்கும். அதேநேரம் சில குழந்தைகள் 4 கிலோவிற்கு மேலும் இருக்கும். 4 கிலோவிற்கு மேல் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல் 1.5 கிலாவுக்கும் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் ஆபத்தில் இருக்கும். எனவே தான் உடனடியாக அந்த குழந்தைகளின் எடையை மேம்படுத்த, சிறப்பு உணவு குழாய்கள் கொண்ட இன்குபேட்டர்களில் வைக்கிறார்கள். இது தான் மருத்துவ ரீதியான உண்மை.
இதேபோல் குழந்தைகள் எழுந்து நடக்க ஒரு வருடம் ஆகும். இதுவே எதார்த்தமான நடைமுறை. இந்நிலையில் ஒரு சிறுவன் தான் பிறக்கும் போதே 5 கிலோ இருந்ததாகவும், பிறந்த 9 நாளில் நடந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அச்சிறுவன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் பேசுகையில், "இமானுவேல் எனக்கு ஒரு பிள்ளையை தருவாய் என்று சொன்னீர்கள் அல்லவா? என்று எனது அம்மா கைகோர்த்து ஜெபிக்கிறார்கள்.. அதேபோல் மருத்துவமனையில் செக் பண்ணி பார்க்குறாங்க.. ஆனால் அது பிறக்குறதுக்கு சான்ஸ் இல்லை.. குழந்தை பிறந்தால் என் அம்மாவிற்கு இருக்கும் பிரச்னையால் அவர்கள் இறந்துவிடுவார்கள்.. என்னை அபார்சன் பண்ண வேண்டும்..அபார்சன் பண்ணுணாத்தான் அம்மா உயிர் வாழ முடியும்.
இப்படியான சூழலில் அம்மாவும் அப்பாவும் ஜெபித்தார்கள். நீங்கள் தருவேன்னு சொன்னீங்க.. நீங்கள் தந்தால் குழந்தையை ஊழியத்திற்கு தருகிறேன். ஊழியத்திற்கு ஒப்புக்கொள்கிறேன்.. தேவன் தந்தார். காலையில் ஆப்ரேசன் தியேட்டருக்கு போகிறார்கள். போன உடனே குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.. உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னாங்க..
பிறந்து 9 நாளிலேயே நடந்துட்டாராமே இந்த அதிசய சிறுவன் pic.twitter.com/UJO9tn763D
— velmurugan (@velmurugantheni) August 21, 2023
எத்தனை பேர் நான் சொல்வதை நம்புறீங்க.. பிறக்கும் போது எத்தனை கிலோ இருந்தேன்னு தெரியலை.. அம்மா சொன்னாங்க.. நான் 5 கிலோ இருந்தேனாம்.. நான் பிறக்கவேமாட்டேன்னு சொன்னாங்க.. 9 நாளில் எழுந்து நின்ற ஒரே குழந்தை நான் தான்... நானே பாத்ரூம் போவேன்.. நானே உட்காருவேன்.. நானே படுப்பேன். 9 நாளில் நடப்பேன்.
நானே சேரில் உட்காருவேன். அந்த அளவிற்கு தேவன் கிருபை செய்தார் " இவ்வாறு அந்த சிறுவன் வீடியோவில் பேசி உள்ளார். அந்த வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம் சிறுவன் சொல்வது போல் ஒரு குழந்தையால் 9 நாளில் நடக்க மருத்துவ ரீதியாக வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications