உயில் எழுதுவது எப்படி தெரியுமா? சாதாரண வெள்ளை தாளில் உயிலை எழுதலாமா? இது செல்லுபடியாகுமா? ஓஹோ
சென்னை: உயில் எழுதுவது எப்படி தெரியுமா? எத்தனை ஆண்டுகளுக்கு இந்த உயில் செல்லுபடியாகும்? வெறும் வெள்ளை தாளில் உயில் எழுதலாமா?
ஒரு நபர், தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு பின்னர், தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரம்தான் உயில் பத்திரம்.. இதற்கு சில விதிமுறைகள் உள்ளன..

விதிமுறைகள்: உயில் எழுதுவது என்பது சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும்.. பிற்காலத்தில், குடும்பத்தில் சொத்து மூலம் எந்த பிணக்கமும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, உயில் எழுதுவது அவசியமாகிறது.. தனக்குரிய சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியும்.. பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது.. பிரித்து தரவும் முடியாது..
ஆனால், உயில்களை வாரிசுகளுக்கு மட்டுமே எழுதி வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. தனக்கு விருப்பமானவர்கள் அல்லது டிரஸ்ட்களுக்கும் சொத்துக்களை எழுதி வைக்கலாம்..
வாரிசுகள்: வாரிசு இருந்தாலும்கூட, அவர்களுக்கு எழுதி வைக்காமல், பிறருக்கும் எழுதி வைக்கலாம். அப்படி எழுதி வைத்தால், வாரிசுகளால் அதை எதிர்க்க முடியாது.. வாரிசுகளுக்கு எழுதி வைத்தால், அந்த சொத்து மனைவிக்கு கிடைக்கும் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வளவு செய்தாலும், அவரது மரணத்துக்கு பிறகே இது உயிலாக கருதப்படும்.
எப்படி எழுத வேண்டும்: சொத்தின் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். சாதாரண வெள்ளை தாளிலும், பத்திர தாளிலும் உயில் எழுதலாம்.. ஆனால், சிவில் வழக்கறிஞரை கொண்டு உயில் எழுதுவது அவசியமாகும். ஒருமுறை உயிலை எழுதிவிட்டால், அதை திருத்த முடியாது என்று பலர் நினைக்கிறார்கள்.. ஒருவர் எழுதிய உயிலை தாராளமாக திருத்தம் செய்யலாம்.. ரத்து செய்துவிடலாம்.. ஆனால், கடைசியாக எழுதப்பட்ட உயிலே செல்லுபடியாகும்..
கையெழுத்துக்கள்: உயிலில் உள்ள ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பம் அவசியம் இருக்க வேண்டும். உயில் எழுதும்போது, 2 சாட்சி கையெழுத்துக்கள் அவசியமாகும்.. ஆனால் சாட்சி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தமில்லாதவராக இருத்தல் வேண்டும். உயிலில் டாக்டர் மற்றும் வக்கீல்களின் சாட்சி கையெழுத்துகளும் கட்டாயம் தேவைப்படும்.
உயிலை பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.. உயிலை பதிவு செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்தான் என்றாலும், பதிவு செய்து கொண்டால் மிகவும் நல்லது.. காரணம், பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு நீதிமன்றம் முன்னுரிமை அளிக்கும். அதுமட்டுமல்லாமல், இதனால் குடும்பத்தில் தேவையில்லாத சிக்கலும் ஏற்படாது..
செல்லுபடியாகும்: எவ்வளவு ஆண்டுகள் என்றாலும், இந்த உயில் செல்லுபடியாகும் என்கிறார்கள்.. எனினும், உரிய கட்டணத்தை செலுத்தி, பத்திரப்பதிவு செய்து பெயரை உடனடியாக மாற்றிக் கொள்வது நல்லது.
அதேபோல, வாரிசுக்கு உயில் எழுதி வைக்கும்போது, மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதினால் இன்னும் நல்லது.. அல்லது வாரிசுதாரரையே நாமினியாக நியமித்துவிட்டால், வருங்காலத்தில் தேவையில்லாத சிக்கல்கள் எழ வாய்ப்பிருக்காது என்கிறார்கள்.
கையெழுத்து: அதேபோல, உயில் எழுதுவதற்கு ஆவணங்கள் எதுவுமே தேவையில்லை.. நீங்கள் எதில் எழுதினாலும் அது செல்லுபடியாகும்.. சாட்சி கையெழுத்து போடும் நபர்கள் தகுதியான நபராக இருப்பது நல்லது.. முக்கியமாக வயதான நபர்களை சாட்சியாக வைப்பதை தவிர்க்கலாம்.. அதேபோல, உயில் பதிவு செய்ததை நகலெடுத்து, ஒன்றை ரெஜிஸ்டர் அலுவலகத்தில் கொடுத்து வைப்பது மிகவும் நல்லது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications