Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரட்டை இலையை முடக்க முடியுமா? ஓபிஎஸ் கனவு நிஜமாகுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் உண்மை இருக்கிறதா? அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையில் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் தைரியமாகச் சொல்லி இருக்கிறார்.

அதைவைத்து அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? என்று விவாதம் வலுத்துள்ளது. அப்படி என்றால், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறுவார்களா? அப்படி மாறினால் மட்டுமே சின்னத்தை முடக்க முடியும்.

Can ADMK logo be disabled? Will the OPS dream come true?

இப்போதுவரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையத்தால் எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அந்த நிலை நீடிக்குமா? அல்லது குழப்பங்கள் வருமா? இப்படிப் பல சந்தேகங்களை ஒரே ஒரு அறிவிப்பு மூலம் ஏற்படுத்தி இருக்கிறார் ஓபிஎஸ்.

ஆனால், இதற்கு எல்லாம் அதிமுக அணியின் தலைமையில் உள்ள எடப்பாடி பழனிசாமி அஞ்சுவதைப் போல் தெரியவில்லை. அவர் கூலாக ஓபிஎஸ்சை டீல் செய்து வருகிறார்.

என்னதான் சின்னம் பழனிசாமியிடம் இருந்தாலும் பெரிய வெற்றியை 2024 தேர்தலில் அதிமுக பெறாது என்றே இந்தியா டுடே உட்பட சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

Can ADMK logo be disabled? Will the OPS dream come true?

அப்படி இருக்கும்போது ஓபிஎஸ் ஏன் குட்டையைக் குழப்புகிறார். அந்தக் குழம்பிய குட்டையில் யார் மீன் பிடிக்கப் போகிறார்கள்? இதற்குச் சட்டத்தில் இடம் உள்ளதா? அதற்காக விடையை மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் கேட்டோம்.

"இரட்டை இலை சின்னமே இல்லாமல் அதிமுகவை வெற்றி பெற வைத்தவர் ஜெயலலிதா. 2001 தேர்தலில் புவனகிரியில் ஜெயலலிதா நிற்பதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டது. ஆவணங்கள் சரியாக நிரப்பப்படவில்லை என்று சொல்லி அதை நிராகரித்தார் தேர்தல் அதிகாரி.

அங்கே அதிமுக நிற்கமுடியாத சூழல் ஏற்பட்டது. உடனே கடைசியில் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்தது அதிமுக. வாழைப்பழ சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு கேட்டார் ஜெயலலிதா. இறுதியில் வாழைப்பழம் வென்றது.

Can ADMK logo be disabled? Will the OPS dream come true?

ஆக, இரட்டை இலை இல்லாமல் அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியும் எனக் காட்டினார் ஜெயலலிதா. அவர் அளவுக்கு அதிகாரம் உள்ளவர் அல்ல எடப்பாடி பழனிசாமி. அவருக்குச் சின்னம் இருக்கும் போதே வெற்றி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இப்போதைக்கு அதிகாரப்பூர்வமாக இரட்டை இலை சின்னம் எடப்பாடியிடம் தான் உள்ளது. அதை முடக்க முடியாது. அதற்கு வாய்ப்பு இல்லை. தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஓபிஎஸ் அப்படிச் சொல்கிறார்" என்கிறார்.

ஒருவேளை மகாராஷ்டிராவில் இறுதிக்கட்டத்தில் அஜித்பவாரை தூக்கியதைப் போல, அதிமுக அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைத் தூக்கத் திட்டங்கள் ஏதேனும் தீட்டப்பட்டு வருகின்றனவா என்று தெரியவில்லை. அப்படி இல்லை என்றால் ஓபிஎஸ் ஏன் பொடி வைக்க வேண்டும்?

எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிறார். ஜெயக்குமார் கூட பாஜகவைக் கடுமையாகத் தாக்கி வருகிறார். ஆனால்,அமித்ஷா கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என்று அதிமுக உட்படப் பல கட்சிகளுக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கிறார்.

அதற்கு நேர்மாறாக 18 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டுபோய் பாஜகவில் இணைக்கிறார் அண்ணாமலை. கூட்டணிக்கு அழைப்பு கொடுத்துக் கொண்டே அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைத் தூக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் அண்ணாமலை.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தேசிய தலைமை விரும்புகிறது. 2026இல் பாஜக சார்பாக ஒரு முதல்வர் வேட்பாளர் என்பதுதான் அண்ணாமலையின் கனவாக உள்ளது.

பாஜக மீண்டும் 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்கிறார்கள். மோடி, எதிர்க் கட்சியினர் பார்வையாளர்கள் இடங்களில்தான் அமர்ந்திருப்பார்கள் என்றும் 1000 ஆண்டுகளுக்கான அஸ்திவாரம் போடப்போகிறோம் என்றும் பேசி வருகிறார்.

அஜித்பவார் வைத்து என்.சி.பி கட்சியை உடைத்ததைப் போல் அதிமுகவை ஓபிஎஸ்சை கொண்டு உடைக்க முயற்சி நடக்கிறதா? அது குறித்து ஷாம் என்ன சொல்கிறார்? அவரது அரசியல் அனுபவம் இந்த விசயத்தில் என்னவாக உள்ளது?

“இதைப்போல கட்சிகள் உடையும் போது சாதிக் அலி வழக்கை முன்னுதாரணமாக கொண்டு தீர்ப்பு வழங்குவார்கள். பிரதானமாகச் சட்டசபையில் எந்த அணிக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் ஆணையம் பிரதானமாக எடுத்துக்கொள்ளும்.

மூன்று வகைகளில் பரீட்சையை வைப்பார்கள். அமைப்பு சார்ந்த பலபரீட்சை. அடுத்து கட்சியின் சட்டவிதிமுறைகளின் படி ஒரு பலபரீட்சை. அதன்பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களின் பலபரீட்சை.

அஜித்பவார் பிரச்சினை எழுப்பியபோது தேர்தல் ஆணையம் 3 பலபரீட்சைக்குப் போகவில்லை. வெறும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாருக்கு அதிகம் உள்ளது எனப் பார்த்தது. அதை வைத்து அஜித்பவார் அணியை அங்கீகரித்தது. கட்சி சின்னமான கடிகாரத்தையும் அவர்தான் பயன்படுத்த முடியும் என்று சொல்லிவிட்டது.

அதன்படி பார்த்தால் அதிமுகவில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்துள்ளவர் எடப்பாடி பழனிசாமிதான். ஆகவே, அவருக்குத்தான் இரட்டை இலை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு 3 நிலுவையில் உள்ளது. அதை மனதில் கொண்டு ஓபிஎஸ் இதைச் சொல்லலாம். அந்த வழக்கில் கூட சின்னத்தை முடக்கும் அதிகாரம் கொண்ட வழக்குகள் அல்ல. சின்னம் என்பது தேர்தல் ஆணையம் தொடர்பானது. ஓபிஎஸ் சொல்லுவது நடைமுறைக்கு உதவாது" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+