25 + 15 டீல்.. ரிப்போர்ட் சொல்லிடுச்சு.. நொறுங்கும் "வோட் பேங்க்".. பாஜக அதிமுக பொதிசுமை: கோடீஸ்வரன்
25 சீட்களை பெறுவதற்கு தமிழக பாஜக அந்த அளவுக்கு பெரிதாக வளரவில்லை என்கிறார் கோடீஸ்வரன்
சென்னை: அதிமுக என்பது மிகப்பெரிய கட்சி.. அந்த கட்சி ஒதுக்கும் சீட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமையில்தான் பாஜக இருக்கிறது.. இன்னும் சொல்லப்போனால், பாஜகவை தவிர்த்து கூட்டணி வைத்தால், அது அதிமுகவுக்குதான் ஏகபோக ஆதாயம் என்கிறார் பத்திரிகையாளர்கோடீஸ்வரன்..!!!
நேற்று முன்தினம் அதிமுக கூட்டம் நடந்த அதேசமயம், பாஜகவின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக கூறியிருந்தார்.. அதிமுக - பாஜக கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்பது உறுதிப்படுத்தப்படாத சூழலில், திடீரென 25 சீட் என்று அண்ணாமலை பேசியது, பரபரப்பை கூட்டியிருந்தது..
பாஜகவுக்கு எதிரான ஒரு அணியினர், எடப்பாடி பழனிசாமி தரப்பிலேயே உள்ளபோது, இன்னும் சொல்லப்போனால், பாஜகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டா என்று தரப்பினர் வலியுறுத்தி வருவதாக சொல்லப்பட்டு வரும்போது, அண்ணாமலையின் 25 சீட் என்பது, அதிமுகவுக்கு தரப்படும் மறைமுக அழுத்தமா? என்ற கேள்வியும் எழுகிறது.

2 2 கோணங்கள்
இதைதான், மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரனிடம் நாம் கேட்டோம்.. ஒன் இந்தியா தமிழுக்கு கோடீஸ்வரன் நமக்கு தந்த ஸ்பெஷல் பேட்டிதான்: "2 கோணங்களில் இந்த விஷயத்தை பார்க்கலாம்.. அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக இருப்பதாக இதை பார்க்கலாம்.. அல்லது புரிதலற்ற, ஒரு முதிர்ச்சியின்மை அரசியலாகவும் இதை பார்க்கலாம்.. முதிர்ச்சியற்றதன்மை என்று ஏன் சொல்கிறேன் என்றால், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று இவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.. அல்லது தங்கள் கட்சியின் வாக்குபலத்தை உணர்ந்து கூட்டணி அமைக்க முன்வர வேண்டும்.

தமிழிசை
எப்போதுமே வாக்கு விகிதாச்சார அடிப்படையில்தான் குறைந்தபட்ச கூட்டணி ஒப்பந்தம் என்பதே உருவாகும்.. அப்படி இருக்கும்போது, 25 தொகுதியை பாஜகவுக்கு தந்துவிட்டு, மிச்சம் 15 தொகுதியை வைத்துக் கொண்டு, அதிமுக என்ன செய்யும்? இதற்கு முன்பு வேறு எந்த பாஜக தலைவர்களாவது, இப்படி ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்களா? என்று பார்த்தால் கிடையாது.. தமிழிசை சவுந்தராஜன் அவர்களோ, முருகன் அவர்களோ, இப்படியெல்லாம் பேசியதும், கருத்து சொன்னதும் கிடையாது.. காரணம், அதிமுகவின் வாக்கு வங்கி என்ன? பாஜகவின் வாக்கு வங்கி எவ்வளவு, அதிமுக எத்தனை சீட் ஒதுக்கும்? என்பதெல்லாம் அந்த தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும்..

25 சீட்கள்
கடந்த முறை அமித்ஷா வந்துபேசியபோதும்கூட, 5, 6 சீட்என்றுதானே இருந்தது? இப்போ எப்படி திடீர்னு 25 ஆக மாறிவிட்டது என்றுதான் புரியவில்லை.. பாஜகவுக்கு அசுர வளர்ச்சி என்று மீம்ஸ்களில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், ஓட்டுப்பகிர்வு என்று வரும்போது அப்படி கிடையாது.. அதனால்தான் முதிர்ச்சியற்ற புரிதலாக இதை பார்க்க வேண்டி உள்ளது.. இது திராவிட அரசியல் உள்ள மாநிலம்.. ஒன்று அதிமுக அல்லது திமுக மாறி மாறி ஆளும் மாநிலம் இது.. எனவே, அதிமுகவை பொறுத்தவரை பாஜக ஒரு சுமைதான்.. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் ஒரு சுமைதான்..

தேய்மானம்
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இங்குள்ள மாநில கட்சிகளுக்கு தேசிய கட்சிகள் என்பது பொதிசுமைதான்.. அதை தூக்கி சுமக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு மாறி மாறி வந்துவிடுகிறது.. ஒருகுறிப்பிட்ட எண்ணிக்கை சீட்டைதான் பாஜகவுக்கு அதிமுக ஒதுக்க வேண்டி வரும்.. அதனால், எத்தனை சீட் கிடைத்தாலும் அது பாஜகவுக்கு லாபம்.. எத்தனை சீட்டுகளை ஒதுக்கினாலும் அது அதிமுகவுக்கு தேய்மானம். 25 சீட் என்று அண்ணாமலை சொல்வதற்கு காரணம் பேரம் மட்டுமே.. 25 என்று சீட்டை ஆரம்பித்தால் 15வது கிடைக்குமா? அல்லது 10ஆவது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புதான்.

50:20 சீட்
ஆனால், பாஜகவுக்கு எத்தனை சீட் தருவது என்று அதிமுகதான் முடிவு எடுக்கும்.. காங்கிரசுக்கு எத்தனை சீட் தர வேண்டும் என்பதை திமுகதான் முடிவு எடுக்கும்.. மாநில அரசுகளை சார்ந்துதான், தேசிய கட்சிகள் நிற்க வேண்டிய நிலைமைதான் உள்ளது.. களரீதியாக பார்க்கும்போது, பல சர்வேக்கள் முடிவுகளின்படி, ஐபேக் உள்ளிட்ட நிறுவனங்களின் ரிப்போர்ட்படி, சில நிலவரங்களை நாங்கள் பார்க்கிறோம்.. அதன்படி, பாஜக கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்தால், அதிமுகவுக்கு நிறைய ஓட்டு சதவீதம் பெற வாய்ப்பு உள்ளது.. காரணம், தமிழகத்தில் வலுவான கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது.. எனவே, அதிமுகவுக்கு அழுத்தம் தந்து, 25 சீட் பெற வேண்டும் என்று பாஜக கணக்கு போட முடியாது..

தூசி தட்டறாங்க
வேண்டுமானால், தங்கமணி, வேலுமணி மீதான வழக்குகள், அல்லது எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவைகளை தூசி தட்டி அவர்களுக்கு நிர்ப்பந்தம் தரலாமே தவிர, தர்மசங்கடம் தரலாமே தவிர, வேறு எந்தவகையிலும் அதிமுகவுக்கு அழுத்தம் தர முடியாது.. 25 சீட் கேட்டு அழுத்தம் தருவதும் பலன் தராது. பாஜக தனித்து போட்டியிட்டால், பாஜக நிலைமை இன்னும் மோசமாகும்.. நோட்டாவுக்கும் கீழே வாங்கின கட்சி என்ற பெருமையும் பாஜகவுக்கு ஏற்கனவே உள்ளது..

பொதி சுமை
அப்படியானால் இந்த 9 வருஷத்தில் தமிழகத்திற்கு என்ன பெரிதாக பாஜக செய்துவிட்டது? பெட்ரோல் விலை 105 ரூபாய்க்கு போயுள்ளது.. டீசல் விலை ஏறியுள்ளது.. மக்களை பாதிக்க கூடிய விஷயங்கள்தான் அதிகமாகி உள்ளன.. பால் வாங்கக்கூட ஆதார் கேட்கிறார்கள்.. கரண்ட் பில் கட்டவும் ஆதார் கேட்கிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் யார் என்று மக்களே யோசிக்க மாட்டார்களா? அதனால், அதிமுகவை விட்டு பாஜக விலகினால், பாஜகவுக்குதான் பின்னடைவு.. பாஜகவை விட்டு அதிமுக விலகினால், அதிமுகவுக்குதான் லாபம்.. நான் சொல்லும் இந்த கருத்துக்கள் எல்லாம், அதிமுக தோழர்கள், அதிமுக தொண்டர்களின் எண்ணப்பிரதிபலிப்பாக நான் இங்கு பதிவு செய்கிறேன்..

ஆதாய ஆதார கூட்டணி
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா என்று அன்று உறுதியாக இருந்தார்.. ஆனால், தமிழகத்தில் மீண்டும் பாஜக கால் வைக்க என்ன காரணம்? தமிழகத்தில் ஊழல்கள் ஊறி போறிப்போயுள்ளது, ஊழல் கட்சிகள் ஆளுகிறார்கள், இதற்கு ஒரு மாற்று தேவை என்று அன்று, அமித்ஷா பேசிவிட்டு போனார். அதற்கு அடுத்த 3 மாதமே அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்கள்.. பிறகு, ஒவ்வொரு அமைச்சர்கள், அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்டு சோதனை நடத்தப்பட்டது.. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை கையில் எடுக்காமல், அதற்கான கைது நடவடிக்கைகளை எடுக்காமல், நீதிமன்ற விசாரணைகள் எதுவும் நடத்தாமல், கூட்டணியிலேயே குறியாய் இருந்தார்கள். அப்படியானால், ஊழல் என்ற விஷயத்தை, கூட்டணிக்கு பாஜக பயன்படுத்தி கொள்கிறது" என்றார்.

Aபார்ம் B பார்ம்
தொடர்ந்து பேசிய அவர், "திமுகவுக்கு எதிரான மெகா கூட்டணியை அதிமுகவால் அமைக்க முடியுமா என்பதையெல்லாம் இப்போதே உறுதியாக கூற முடியாது.. காரணம், இவர்கள் எல்லாருமே அரசியல்வாதிகள்.. இவர்களின் நாக்கு எப்படியும் பேசும்.. இன்னைக்கு ஆதார் கெட்டது என்பார்கள், பிறகு ஆதார் நல்லது என்பார்கள்.. ஜிஎஸ்டி கெட்டது என்பார்கள்.. பிறகு ஜிஎஸ்டி வேகமாக இவர்களே கொண்டுவருவார்கள்.. தேர்தல் கமிஷனில் ஏ-பார்ம், பி-பார்ம் தருவார்களே, அன்னைக்குதான் யார் யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்றே நம்மால் சொல்ல முடியும்.. அதைகூட நாம் சொல்ல முடியாது.. தேர்தல் ஆணையம்தான் உறுதியாக சொல்லும். செட்டில்மென்ட்டுக்காக எந்த கொள்கையையும் இவர்கள் விட்டுத்தந்துவிடுவார்கள்.. திராவிடம் பேசுபவர்களும் சரி, சனாதனம் பேசுபவர்களும் சரி, மாறி மாறி கூட்டணி வைத்தவர்கள்தானே?

ரிசார்ட்ஸ்
இதனால் பொதுமக்களுக்குதான் பிரச்சனையே தவிர, இவர்களுக்கு கிடையாது.. பொதுமக்களை திசை திருப்புவதற்கும், மடை மாற்றுவதற்குமான உக்திகள்தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.. எது தங்களுடைய செல்வாக்கையும், வருவாயையும், அரசியலையும் பலப்படுத்தி கொள்ள தேவையோ, அதை மட்டுமே இவர்கள் செய்வார்கள்.. காலையில் ஒரு கூட்டணி இருக்கும், மாலையில் வேறு ஒரு கூட்டணி இருக்கும்.. வெற்றி பெற்றது ஒரு சின்னமாக இருக்கும், ரிசார்ட்டில் தங்கிவிட்டு வந்தால் வேறு ஒரு சின்னமாக மாறியிருக்கும்.. இவர்களை நம்பி எந்த கூட்டணி நம்பிக்கையும் வைத்து பேச முடியாது.. ரொம்ப சுலபமாகவே காலத்திற்கேற்றார்போல் மாறக்கூடிய தன்மை பெற்றவர்கள் இந்த அரசியல்வாதிகள்" என்றார்!!
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications