"பூனைக்குட்டி" வரலயே.. கி. வீரமணி கிட்ட MONEY இருக்கு.. திமுக ஒரு கட்சியே கிடையாது: சுப்ரமணியன் சாமி
சுப்ரமணியன் சுவாமி பாஜக, திமுக, அதிமுக குறித்து காரசாரமான பேட்டி ஒன்றினை தந்துள்ளார்
சென்னை: திமுக என்பது ஒரு கட்சியே கிடையாது என்றும், தமிழகத்தில் பாஜக கொஞ்சம்கூட வளரவில்லை என்றும் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்தாலும், அக்கட்சியை சரமாரி விமர்சித்து சேம்சைடு கோல் போட்டு வருபவர் பாஜகவின் முக்கிய மற்றும் சீனியர் தலைவர் சுப்பிரமணிய சுவாமி..
அதேசமயம் திமுகவை விடாமல் விமர்சித்து வருபவர்.. அதிமுகமீது எப்போதுமே தன்னுடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியதில்லை. ஆனால், சசிகலா மீதான நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை..

ஜஸ்ட் பூனைக்குட்டி
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், "அதிமுகவில் ஒரே ஒரு அணி மட்டுமே உள்ளது... அது சசிகலா அணி மட்டுமே" என்று சொல்லி அதிமுக, அமமுகவை சேர்த்து ஆச்சரியப்பட வைத்தவர்தான் சு.சாமி. அதுமட்டுமல்ல, "தமிழக அரசியல் தலைவர்கள் இங்கே தான் புலி, தலைநகர் டில்லி சென்றால் வெறும் பூனைக்குட்டிதான்' என்று சொன்னவர்.. இப்போதுகூட சசிகலா மீதான நம்பிக்கை சு.சாமிக்கு அதிகமாகவே உள்ளதாக தெரிகிறது.. நேற்றைய தினம் சென்னையில் ஒரு பேட்டி தந்துள்ளார் சுப்பிரமணிய சாமி.. அதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், என மொத்த பேரையும் விமர்சித்துள்ளார்.. திராவிடர் கழக வீரமணியை கூட தன் பேச்சில் விட்டுவைக்கவில்லை.. அவர் பேசியதன் தொகுப்புதான்..

பூனை குட்டி
"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, பாஜக ஏதும் செய்யவில்லை.. நான் ஏதாவது சொன்னால், உடனே தலையிடுகிறேன் என்று சொல்லிவிடுவாங்க. நானும் பாஜகதான்.. ஆனால், தமிழகம் மட்டுமில்லை.. இந்தியா முழுமைக்கும் உள்ள பாஜகவில் இருக்கிறேன்.. மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல, தமிழகத்தில் பாஜக துடிப்புடன் இல்லை. டெல்லியில் இருந்து பத்திரிகைகள், அறிக்கைகள் வாயிலாக, தமிழகத்தில் பாஜவை வளர்க்க முடியாது. தேர்தல் நேரத்தில் அதிமுக, திமுக என்று மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் செய்தால், தமிழகத்தில் பாஜக வளராது..

ரத்த ஆறு
தமிழகத்தில் பாஜக தனித்து நிற்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டும்... அப்போதுதான் பாஜக வளரும். கூட்டணிக்காக யாரையும் காக்கா பிடிக்கக்கூடாது.. அண்ணாமலை என்ன செய்கிறார் என்றே எனக்கு தெரியாது.. அவர் எதைப் பற்றியும் என்னிடம் பேசுவதில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முயற்சிக்கிறாரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. திமுகவுக்கு கொள்கை என்று எதுவுமே கிடையாது.. நாட்டை பிரிப்பது குறித்துதான் பேசிட்டே இருப்பார்கள்..

பூனைக்குட்டி
ஆனால், தேர்தலின்போது வேறுவிதமாக பேசுவார்கள்.. என்னுடைய முயற்சியால், ஏற்கனவே தமிழகத்தில் திமுக ஆட்சி நீக்கப்பட்டது. அப்போது, 'ரத்த ஆறு ஓடும்' என்று வீரமாக பேசினார்கள்.. ஆனால் ஒரே ஒரு பூனைக்குட்டி கூட வெளியில் வரவில்லை... அதனால், திமுக குறித்து யாருக்கும் கவலை இல்லை.. அது ஒரு கட்சியோ, இயக்கமோ இல்லை.. நாட்டை பிரிப்பதற்காக, அதை துவங்கினார்கள்.. இப்போது ஊழலோ ஊழல் என்று அந்த கட்சி இருக்கிறது...

வீரமணி + Money
கோவில் விஷயத்தில் அநாகரிகமாக நடந்தால், அதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்.. ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.. தமிழகத்தில் உள்ள கோவில் பூசாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுக்கின்றனர்... இங்குள்ள திராவிடர் கழகத்தினர் கோவில் பூசாரிகளை தேவையில்லாமல் தாக்கி பேசி, கஷ்டம் கொடுக்கின்றனர். நாட்டில் 80 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். அதனால், இந்துக்களை இவர்கள் யாரும் ஏதும் செய்ய முடியாது. வீரமணியிடம் வீரம் கிடையாது.. ஆனால் Money மட்டும் நிறைய கொட்டி வைத்திருக்கிறார்" என்று விமர்சித்துள்ளார் சுப்பிரமணிய சாமி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications