• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"356".. அதென்ன திமுக ஆட்சியை "கவிழ்ப்பதாக" எதிர் முகாம் ஒரே மாதிரி சொல்றாங்களே.. பாஜக பிளான் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சி கவிழ போகிறது, பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என்று தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் வலுவாக சொல்லி வருகிறார்கள்.. இது சாத்தியமா?

10 வருடம் கழித்து, இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்க துவங்கிவிட்டன.

ஆளும் தரப்பு மீது எதிர்தரப்பு குற்றம், குறைகள், புகார்கள், விமர்சனங்களை வீசுவது வழக்கம்தான் என்றாலும், ஆட்சி கலைந்துவிடும் என்றே பேசிவருகிறார்கள்.

1966லிருந்து கட்சிக்காக கொடி பிடிக்கிறேன்! ஆதங்கத்தை பகிர்ந்த திமுக சீனியர்! சமாதானம் செய்த அமைச்சர்1966லிருந்து கட்சிக்காக கொடி பிடிக்கிறேன்! ஆதங்கத்தை பகிர்ந்த திமுக சீனியர்! சமாதானம் செய்த அமைச்சர்

 கூல் தலைவர்

கூல் தலைவர்

இதை முதன்முதலில் பொதுக்கூட்டங்களில் பேச ஆரம்பித்தவர் எடப்பாடி பழனிசாமிதான்.. "திமுக ஆட்சி விரைவில் கலையப்போகிறது, இன்னும் 40 அமாவாசைதான், 35 அமாவாசைதான்" என்று அமாவாசை கணக்கை சொல்லி வருகிறார்.. அடுத்து, அதிமுக மாஜிக்களும் சொல்லி வருகிறார்கள்.. அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்று உறுதியாக சொல்லி உள்ளார்.

 சான்ஸ் இருக்கா?

சான்ஸ் இருக்கா?

இப்போது டிடிவி தினகரனும் இதே கருத்தை சொல்லி உள்ளார்.. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போதுகூட, என்.ஐ.ஏ நடத்தும் சோதனையெல்லாம் பார்க்கும் பொழுது இந்திய இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகள், தொடர்ந்து பல ஆயுதங்கள் கைப்பற்றியது, இதெல்லாம் பார்க்கும்போது வாய்ப்பு இருக்கலாம் என்றார்.

 டிபேட்

டிபேட்

இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.. ஒரே மாதிரியான இந்த தலைவர்கள் சொல்ல என்ன காரணம்? அப்படியான முயற்சிகள் ஏதாவது நடந்து கொண்டிருக்கிறதா? இதற்கெல்லாம் வாய்ப்பு உள்ளதா? என்பது தெரியவில்லை.. ஆனால், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா ஒருமுறை, வெளியிட்டிருந்தஅறிக்கையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் முறை" பற்றி கூறியிருந்தார்.. இது அப்போதே அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு விவாதத்தை கிளப்பியது.

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்லவே.. காரணம், 1967 வரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு, 1968களில் சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட பிறகு, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது.. ஆனால், மத்திய பாஜக அரசு இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்தால், தேர்தல் செலவு குறையும் என்று காரணம் சொல்லப்பட்டது.. எனினும், இதனால் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக விவாதங்கள் வெடித்தன. அதற்கு பிறகு இந்த அறிவிப்பு குறித்து மத்திய பாஜக வேறு எதையும் முன்னெடுக்கவில்லை என்றே தெரிகிறது.

"ஒரே நாடு ஒரே தேர்தல்"

சமீபகாலமாக, திமுக ஆட்சி கலைக்கப்பட்டுவிடும் என்று சொல்லி வருவதை பார்க்கும்போது, ஒருவேளை "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.. அதற்காக ஒரு அரசை கலைப்பது என்பது அவ்வளவு எளிதாகிவிடுமா? 2024ல் எம்பி தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்து என்று முடிவானால், மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுமா? இதற்கு மாநில அரசுகள் ஒப்புக் கொள்ளுமா? அல்லது விரும்பி ஓட்டுப்போட்டு தங்களுக்கான அரசை தேந்தெடுத்த மக்கள்தான் ஒப்புக் கொள்வார்களா? ஆட்சி கலைந்ததும், கவர்னர் ஆட்சி நடைமுறைப்படுத்தபடுமா? என்றெல்லாம் புரியாத குழப்பமாகவே நீள்கிறது.

 சான்ஸ் + சாய்ஸ்

சான்ஸ் + சாய்ஸ்

அதேபோல, 355 சட்டப்பிரிவையோ அல்லது 356 சட்டப்பிரிவையோ எளிதாக பயன்படுத்திவிடவும் முடியாது என்பதால்தான், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, திமுகவுக்கு அழுத்தம் தந்து, அதன்மூலம் இந்த அரசை டேமேஜ் செய்து, ஆட்சியை கலைத்துவிடும் நோக்கத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கணக்கு போட்டு வருவதாக சொல்கிறார்கள்.. தமிழகம் மட்டுமில்ல, எங்கெல்லாம் பாஜக அல்லாத மாநிலங்களில், அம்மாநில அரசுகள் வலுவாக உள்ளதோ, அங்கெல்லாம் இதுபோன்ற யுக்திகளை பாஜக கையில் எடுத்து வருகிறதாம்.. ஆனால், திமுக போன்ற கட்சிகளுக்கு இதை வைத்து, ஒருவிதமான அழுத்தம் தரலாமே தவிர, ஆட்சியின் மீது அவ்வளவு எளிதாக யாரும் "கை" வைத்து விட முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!!!

English summary
Can BJP do it and Assembly elections are likely to be held in tamil nadu during the parliamentary elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X