"முஸ்லிம் ஓட்டு".. பாஜக வேட்பாளர்னு சொன்னதுமே.. வேலூர் ஏ.சி.சண்முகத்துக்கு போன் பண்ணது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக வேட்பாளர் லிஸ்ட் வெளியானதிலிருந்தே பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்தபடியே உள்ளது. அந்தவகையில், புதிய நீதி கட்சி ஏ.சி. சண்முகம் படுகுஷியில் காணப்படுகிறார்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த திடீர் போன்தான்.

ஏசி சண்முகம், இந்த முறை எப்படியும் அதிமுகவுடனேயே கூட்டணி வைப்பார் என்றே கடைசிவரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

Can BJP win minority votes in Vellore Constituency and Super star Rajinikanth congratulated BJP A C Shanmugam

இதற்கு சில காரணங்களும் கூறப்படுகின்றன.. அதாவது, கல்வி தந்தைகளாக அறியப்படும் ஜெகத்ரட்சகன், பாரிவேந்தர் எல்லாம் எம்.பியாகி டெல்லி பக்கம் என்றோ சென்றுவிட்ட நிலையில், ஏ.சி.சண்முகம் மட்டும் இன்னும் அதை எட்ட முடியாமல் உள்ளாராம்.. அத்துடன், பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி என ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதால், எப்போதுமே மத்திய அரசுடன் சுமூக உறவை பேண விரும்புவதாக தெரிகிறது.

பாரிவேந்தர்: அதனால்தான், பாரிவேந்தரை போலவே, பாஜகவுடன் இம்முறை கூட்டணி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.. அதற்கேற்றவாறு, இதுவரை ஏசி சண்முகம், பாஜகவை விமர்சிக்காமலேயே இருந்ததை பலரும் கவனிக்காமல் இல்லை.

தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதையடுத்து, வேலூர் தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி கேட்டு வந்தார்.. அதன்படியே வேலூரை ஏசி சண்முகத்துக்கு பாஜக ஒதுக்கியிருக்கிறது. எதிர்பார்த்த தொகுதி கிடைத்துவிட்டதால் பூரிப்பில் உள்ளாராம் ஏசி சண்முகம்..

இஸ்லாமிய ஓட்டு: எப்போதுமே தேர்தல் என்றாலே "தாராளங்களை" பற்றியெல்லாம் ஏசி சண்முகம் கவலைப்பட மாட்டார்.. பசையுள்ள நபர் என்பதால், சில பல தாராளங்கள் கிடைக்கும் என்பதால், தொகுதிகள் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முறை, எப்படியாவது சிறுபான்மையினர் வாக்கு வங்கியை அதிகமாக பெற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக களம் கண்டு வருகிறது.. ஆனால், திமுகவின் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை உடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஏசி சண்முகம் களம் காண போகிறாராம்..

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, "இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக எப்போதுமே இருப்பேன்" என்று ஏசி சண்முகம் தந்த வாக்குறுதியை தொகுதி மக்கள் இன்னமும் மறக்கவில்லை.

எம்ஜிஆர் விசுவாசி: ஏசி சண்முகம் என்றாலே, எம்ஜிஆரின் விசுவாசி என்றே தொகுதியில் அடையாளம் காணப்பட்டவர்.. இவரது கல்வி நிறுவனங்களில் நிறுவப்பட்டிருக்கும் எம்ஜிஆர் சிலைகளே அதற்கு சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றன.. ஒவ்வொரு முறையும் இரட்டை இலையுடன் தன்னுடைய தொகுதிகளுக்கு சென்று வாக்கு கேட்ட ஏசி சண்முகம், இந்த முறை தாமரையுடன் தொகுதியில் வலம்போகிறார்..

வேலூர் தொகுதி நிலவரம் இப்படி அனலடித்து கொண்டிருக்க, திடீரென ஏசி சண்முகத்துக்கு போனில் வாழ்த்து ஒன்று வந்துள்ளது. நேற்றிரவுதான், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது. வேலூர் தொகுதிக்கு ஏசி சண்முகம் வேட்பாளராக பெயரை அறித்ததுமே, முதல் நபராக போனை போட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு

அறிக்கை: இது புதிய நீதிக்கட்சி அறிக்கை ஒன்றையே வெளியிட்டுவிட்டது. அந்த அறிக்கையில், "புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக டெல்லி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளராக அறிவித்தபின் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களும், முன்னாள் கவர்னர், திருமதி தமிழிசை சௌந்தரராஜன், அரவிநத் ரெட்டி, தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு. அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் பத்மஸ்ரீ ரஜினிகாந்த் அவர்களும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

நெருக்கம்: ஏசி சண்முகத்தை பொறுத்தவரை, ரஜினியுடன் மிக நெருக்கமான நட்பை கொண்டிருப்பவர்.. ரஜினி மீது தனிப்பிரியம் வைத்திருப்பவர்.. 3 வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, போயஸ் கார்டன் சென்று ரஜினியை சந்திக்க யாருமே அனுமதிக்கப்படவில்லை. அப்போது ரஜினி வீட்டுக்கு சென்றது, மூத்த தலைவர்கள் தமிழருவி மணியனும், ஏசி சண்முகமும்தான்.

அப்போது ஏசி சண்முகத்திடமும் தன்னுடைய உடல் நிலை தொடர்பாக, ரஜினி கவலை தெரிவித்ததாக தகவல் கசிந்தது. எப்போதுமே ஏசி சண்முகம் ரஜினியுடன் போட்டோ எடுத்துக்கொள்வார். ஆனால் அப்போது, கொரோனா அச்சம் காரணமாக, போட்டோகிராபரை கூட வீட்டிற்குள் ரஜினி தரப்பு அனுமதிக்கவில்லை என்றார்கள்..

வாழ்த்துக்கள்: தன்மீது எப்போதுமே அதீத நட்பு + பாசம் செலுத்திவருபவர் ஏசி சண்முகம் என்பதால், ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்தை கூறியிருக்கிறார் போலும்.. எப்படியோ, அனலடிக்கும் வேலூரில் "AC"-யின் பிரச்சாரம் இனிதே ஆரம்பமாகும் என தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+