Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கண்சிவந்த" மேலிடம்.. ஸ்டாலின் காதுக்கு போன அந்த மேட்டர்.. முதல்வரின் அதிரடி ஆக்‌ஷன்

திமுக சீனியர்கள் சர்ச்சை பேச்சால் தமிழக காங்கிரஸ் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் சில மூத்த அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கள் முதல்வரின் காதுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், கூட்டணி காங்கிரஸில் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.. என்ன நடந்தது?

திமுகவில் சமீபகாலமாகவே அமைச்சர்கள் சர்ச்சைகளில் பேசி சிக்கி கொள்வது அதிகமாகி வருகிறது.. அதிலும் இதில் தொடர்ந்து அடிபட்டு வருவது ஆர்எஸ் பாரதியின் பெயர்தான்.

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்.. இவர் சீனியர் என்றாலும், அடிக்கடி ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்கி கொள்வார்.

 சிவப்பு விளக்கு

சிவப்பு விளக்கு

ஏற்கெனவே பட்டியல் இனத்தவர் குறித்து பேசி வசமாக மாட்டிக் கொண்டதால், அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது... அதே போல, மீடியாக்களை "சிவப்பு விளக்கு" பகுதியுடன் தொடர்புபடுத்தி பேசியதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. அதற்கு பிறகும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, "தேர்தல் அறிக்கையை டிஆர் பாலுதான் தயார் செய்தார். தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாமல் ஏதாவது விட்டுப் போய் இருந்தால், அதை அவரிடம் போய் கேளுங்கள்.. அதை விட்டுவிட்டு, தெரியாமல் சில முண்டங்கள் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

 நெளிகிறதே

நெளிகிறதே

வாக்குறுதிகள் நிறைவேற்றாததற்கு உரிய காரணத்தை சொல்லாமல், சம்பந்தமே இல்லாமல் டிஆர் பாலுவை இந்த விஷயத்தில் உள்ளே கொண்டுவந்து மாட்டிவிட்டாரே என்ற தர்மசங்கடம் திமுக நிர்வாகிகளிடம் ஏற்பட்டது.. அதற்கு பிறகு, இன்னொரு கூட்டத்தில் பேசிய சீனியர் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், "வளராத மாநிலங்கள் என்றால் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான். இந்த வளர்ச்சியடையாத மாநிலங்களில் மட்டுமே இந்தி மொழி என்பது தாய்மொழியாக உள்ளது. அப்படியெனில் எதற்காக நான் இந்தி படிக்க வேண்டும். இந்தி, சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும்" என்றார்.

பானிபூரி

பானிபூரி

அதேபோல, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள்... ஆனால் தமிழகத்தில் இந்தி படித்தவர்கள்தான் பானிபூரி விற்கிறார்கள்... யாரும் யார் மீதும் மொழியை திணிக்க கூடாது என்று பேசியிருந்தார்.. இப்படி இந்திக்கு எதிரான பேச்சினால் காங்கிரஸ் தரப்பு அதிருப்திக்குள்ளானதாக கூறப்பட்டது.. காரணம், வடமாநிலங்களில் காங்கிரஸின் கோட்டைகளை ஆம்ஆத்மி, பாஜகவிடம் இழந்து வரும் நிலையில், இந்தி எதிர்ப்பு பேச்சுக்கள் தங்களை மேலும் பலவீனப்படுத்தி விடுகிறதே என்ற கலக்கம் சூழ்ந்ததாம்.

 தர்மசங்கடம்

தர்மசங்கடம்

பேரறிவாளனை கட்டிப்பிடித்த விவகாரத்தில் கடுப்பில் இருந்த காங்கிஸ் கட்சியானது, ராஜீவ் நினைவு தினத்தின்போது, அதாவது மே 21ம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை திமுக தரப்பு எடுக்கவில்லையே என்ற வருத்தத்திலும் இருந்த நிலையில், திமுகவின் தர்மசங்கடங்கள் எல்லைமீறுவதாகவும் அக்கட்சியில் வருத்தம் நிலவுகிறதாம்.. இந்தநேரத்தில், திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்று காமராஜர் கூறியதாகவும், கடைசியில் அவருக்கே கல்லறை கட்டியது திமுக ஆட்சி தான் என்றும் ஆர்எஸ் பாரதி பேசியிருக்கிறார்..

முணுமுணுப்பு

முணுமுணுப்பு

விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ஆர்எஸ்பாரதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தாலும், விஷயம் இதோடு அடங்கவில்லை என்கிறார்கள்... இதை பற்றி மேலிடத்துக்கு புகார் சொல்ல ஒரு தரப்பினர் டெல்லிக்கும் சென்றுள்ளார்களாம்.. அந்தவகையில், நடந்து வரும் சில தர்மசங்கடங்கள், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.. ஆர்எஸ் பாரதி மீது ஏற்கனவே புகார்கள், விமர்சனங்கள் உள்ளதால்தான், எம்பி சீட் இந்த முறை மறுக்கப்பட்டது.. இல்லாவிட்டால் இவருக்கு நிச்சயம் பதவி ஒதுக்கப்பட்டிருக்கும் என்றே முணுமுணுக்கப்பட்டது..

 வலிக்காமல் அடிப்பது

வலிக்காமல் அடிப்பது

இப்போது தொடர் சர்ச்சையாகவே பேசிவருவதால், அமைப்பு செயலர் பதவிக்கும் சிக்கல் வருமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, பலவிதமான புகார்கள் முதல்வரின் காதுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.. திமுக சீனியர்கள் அல்லது நிர்வாகிகள் மீதான சர்ச்சை புகார்கள் வெடிக்கும்போதெல்லாம், "விரைவில் அமைச்சரவை மாற்றம் + நிர்வாகிகள் மாற்றம்" என்பன போன்ற செய்திகள் மீடியாக்களில் வட்டமடித்து செல்லும்.

 மென்மை மனம்

மென்மை மனம்

ஆனால், சமீபகாலமாகவே, சர்ச்சைகள், வதந்திகள் போக்கு அதிகமாகி உள்ளதால்தான், 2 முறை தன் கட்சிக்காரர்களுக்கு முதல்வர் கண்டிப்பு காட்டி அறிக்கைகளை வெளியிடும் சூழலும் இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது.. "நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன்" என்று அறிக்கையில் ஸ்டாலின் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

 இளகிய மனசு

இளகிய மனசு

ஒரே வாரத்தில், தன் கட்சிக்காரர்களுக்கு இதற்கு முன்பு, இதுபோல் 2 முறை முதல்வர் கடிதம் எழுதியதும் கிடையாது.. எனினும் முதல்வரின் தொடர் அறிவுரைகளையும், கண்டிப்புகளையும் திமுகவினர் அசால்ட்டாக எடுத்து கொள்கிறார்களோ? என்று கேள்வியும் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகிறது.. அதேபோல, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்கள் மீது முதல்வர் இந்த முறையாவது நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியும் சேர்த்தே எழுகிறது.

1+1 பதவிகள்

1+1 பதவிகள்

சில மாதங்களுக்கு முன்பு, ஒருவரே 2 பதவிகளையும் கட்சியில் வகிக்க கூடாது என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டு, அதன்மூலம், 2 பதவிகளை வகித்து வருவோரிடமிருந்து, ஒரு பதவியை பறித்து, அவைகளை இளைஞர்களிடம் வழங்கவும் திமுக மேலிடம் யோசித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. அநேகமாக இந்த நடவடிக்கையைதான் முதல்வர் ஸ்டாலின் விரைவில் எடுக்கக்கூடும் என்கிறார்கள்.. இதனால், பல்வேறு அதிருப்திகளுக்கு வழிவகுக்காமல் தடுக்க முடியும் என்றும் நம்பப்படுகிறதாம்.. ஆனாலும், முதல்வர் ஸ்டாலினின் அபரிமிதமான கரிசனம் + இளகிய மனப்பான்மை + மென்மையான அரசியல் + "வலிக்காமல் அடிப்பது" போன்றவையெல்லாம் எந்த வகையில் திமுகவின் வெற்றிக்கு உதவ போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+