"முக்கோண இடி".. விட்றாதீங்க புரியுதா.. ஸ்டாலின் எடுத்த சைலண்ட் மூவ்.. காரணமே சீமான், எடப்பாடிதான் போல
எடப்பாடி, அண்ணாமலை, சீமான் பிரச்சாரங்களினால் திமுகவின் வாக்கு வங்கியில் கடைசி நேரத்தில் பாதிப்பு வருமா
சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில், தங்களது வெற்றியானது எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்க போகிறது என்பதே திமுகவின் மிகப்பெரிய கவலையாக உருவெடுத்துள்ளதாம்.. ஜஸ்ட் பாஸ் என்றில்லாமல், மாஸ் வெற்றியை அடைய செய்யும் வியூகத்தையும் திமுக தரப்பு கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆதரவில் கை சின்னமும், பாஜக ஆதரவில் இரட்டை இலை சின்னமும் நேரடியாக மோதுகின்றன.
தமிழக மக்களிடம் தேர்தல் நேரத்தில் சின்னங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. உதயசூரியனா ? இரட்டை இலையா? என்று வரும் போது, போட்டி பலமாக இருக்கும்.

பர்ச்சேஸ் ஓட்டு
ஆனால், இங்கு கையும் இலையும் மோதுகின்றன. கையா? இலையா? என வருகிறபோது, தொகுதியில் இலை தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதனையெல்லாம் ஆராய்ந்துள்ள எடப்பாடி தரப்பு, "ஓட்டுகளை பர்ச்சேஸ் செய்ய நினைப்பவர்களின் திட்டத்தை தடுத்து நிறுத்தினால் போதும். நாம் ஜெயித்துவிடலாம்" என்று கணக்கு போட்டது. அதுமட்டுமல்ல, இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் கையை ஜெயிப்பது பெரிய விசயம் இல்லை என்றும் அதீத நம்பிக்கையில் விவாதித்துக் கொள்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.. அதாவது, காங்கிரஸை மட்டுமே குறி வைத்து எடப்பாடி தரப்பு கணக்கு போட்டதாக தெரிகிறது..

ஹோப் செந்தில்பாலாஜி
ஆனால், திமுகவோ வேற முடிவை எடுத்தது.. கூட்டணிக்கு ஒதுக்காமல் நேரடியாகவே களமிறங்க வேண்டும் என்று திமுகவில் பல சீனியர்கள் ஆலோசனை சொல்லியும், காங்கிரசுக்கே, அதுவும் இளங்கோவனுக்கே இந்த சீட்டை விட்டுக்கொடுக்க முடிவு செய்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. எனினும், இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தை துவக்குவதற்கு முன்பாகவே, திமுகவினருக்கான தேர்தல் செலவினங்களை கவனித்துக் கொள்ளும் அமைச்சர்கள் நேரு, செந்தில்பாலாஜி இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் போனை போட்டு பேசியிருந்தார்..

சீறும் சீமான்
அப்போது, "இடைத்தேர்தலின் வெற்றி காங்கிரசுக்கான வெற்றியாக யாரும் பார்க்க போவதில்லை. அது நம் கட்சிக்கான வெற்றியாகவும், நம் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையாகவும் தான் பார்க்கப்படும். தொகுதியில் நாம் வெற்றிப்பெறுவோம் என்பதில் சந்தேகம் எனக்கில்லை. ஆனால், அது போதாது... எதிர்த்து நிற்கிற அதிமுக அணியும், மற்ற கட்சிகளும் டெபாசிட் போக வேண்டும். டெபாசிட் இழந்தால் தான் நான் சந்தோஷப்படுவேன்.. திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கிற எல்லோருக்கும் டெபாசிட் போக வேண்டும். அதற்கேற்ப தேர்தல் பணி செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருந்தாராம்.

டர்னிங் பாயிண்ட்ஸ்
இதற்கு பிறகுதான் திமுக தலைவர்கள் ஆளுக்கு ஒருபக்கம் பிரச்சாரத்தில் தீவிரமெடுக்க, செந்தில்பாலாஜியோ, அதைவிட ஸ்பீடு எடுத்தார்.. மொத்த திமுக அமைச்சர்களும் ஈரோட்டில்தான் குவிந்துள்ளனர் என்று எடப்பாடி, பாஜக தரப்பு சொல்லும் அளவுக்கு பிரச்சாரங்கள் சூடுபிடித்தன.. ஆனால், திமுக போட்ட கணக்குகள், திடீரென சரிய ஆரம்பித்துவிட்டன.. காரணம், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார நெடி சற்று அதிகமாக இருந்ததை திமுக எதிர்பார்க்கவில்லை.. தடித்த வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி பேசுவாரா? என்ற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், திமுகவின் அதிருப்தி வாக்குகளை தன் பேச்சால் கவர்ந்திருந்தது, இந்த பிரச்சாரத்தில் டர்னிங் பாயிண்ட்டாக இருந்தது.

டேமேஜ்
மேலும், தொகுதியில் பிரதான இடங்களில் வாக்கு சேகரிக்க செல்லும்போது பாஜகவையே கழட்டிவிட்டு, சிறுபான்மையினருக்கு ஆதரவான பிரச்சாரத்தை எடப்பாடி முன்னெடுத்ததையும் திமுக எதிர்பார்க்கவில்லையாம்.. இதற்கு நடுவில் சீமானின் என்ட்ரி புயல்போல இருந்துள்ளது.. தங்களுடைய அதிருப்தி வாக்குகள் மொத்தமும், அதிமுகவுக்கு மட்டுமே செல்லாமல், சீமானுக்கும் பிரிந்து செல்வது திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது என்றாலும், திமுகவை டேமேஜ் செய்த விதமும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை கவர சீமான் பேசிய பேச்சுக்களும், பாஜகவின் வெறுப்பு ஓட்டுக்களையும் சேர்த்தே ஈட்டிவிடக்கூடிய அளவுக்கு சென்றுவிட்டதாம்..

லாஸ்ட் மினிட்
கடைசி நேரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் சீமானின் தேர்தல் பிரச்சார வியூகங்கள்தான் திமுகவை லேசாக யோசிக்க வைத்துள்ளதாக தெரிகிறது.. அதனால்தான், தற்போது தொகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது தினந்தோறும் முதல்வர் ஸ்டாலின் கேட்டு வருகிறாராம்.. அதன்படி, களநிலவரமும் முதல்வருக்கு ரிப்போர்ட்களாக தினமும் அனுப்பப்பட்டு வருகிறதாம்.. அந்தவகையில் தற்சமயம் கிடைத்துள்ள ரிப்போர்ட்படி, திமுக கூட்டணி வெற்றிதான், ஆனால், வாக்கு சதவீத அளவில் மாறுபாடுகள் பெரிய அளவுக்கு இல்லை என்பதுபோல உள்ளதாம். "திமுகவை எதிர்த்து நிற்கும் மொத்த பேரும் டெபாசிட்கூட வாங்க கூடாது, அதற்கேற்றபடி களப்பணியில் இறங்குங்கள்" என்று முதல்வர் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாறுபாடு தென்பட்டுள்ளதாம்..

கனிகிறது காலம்
அதனால்தான், முக்கிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளாராம் ஸ்டாலின்.. திமுக வாக்குகளை தவிர, நடுநிலை வகிக்கும் பொது மக்களின் வாக்குகளை திமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்று பொறுப்பாளர்களிடம் உத்தரவிட்டுள்ளாராம்.. திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பெருமளவு தொகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இதன் வேகத்தை கூட்ட வேண்டும் என்றும் சொல்லி உள்ளாராம்.. ஏற்கனவே, இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்ட சமூக வாக்குகள் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்களின் ஆதரவும் திமுக பக்கமே பெருமளவு உள்ளது.. இதற்கு நடுவில் முதல்வர் ஸ்டாலின், கமல், உதயநிதியின் பிரச்சாரங்களும் முக்கியத்துவத்தை பெற்றுள்ள நிலையில், அநேகமாக இன்னும் 2 , 3 நாட்களில் தொகுதிக்குள் கள நிலவரங்கள் மாறி, திமுக பக்கம் சாதகமாகலாம் என்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications