திமுக கூட்டணியை முறிக்க.. "ஒட்டும் வேணாம், உறவும் வேணாம்".. பற்றவைத்த பாஜக.. எகிறிய எம்எம் அப்துல்லா

திமுக எம்பி எம்எம் அப்துல்லா கம்யூ. கூட்டணி குறித்து ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்பு குறித்த விஷயத்தில், இனி ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று அவ்விரு கட்சிகளையும் கூட்டணியிலிருந்து உதறித் தள்ளும் தைரியம் ஸ்டாலினுக்கு உள்ளதா? என்று, பாஜகவின் திருப்பதி நாராயணன் எழுப்பியிருந்த கேள்விக்கு திமுக எம்பி எம்எம் அப்துல்லா பதிலடி தந்துள்ளார்.

10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்பை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.. ஆனால், தேசிய அளவிலான காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் வரவேற்று வருகின்றன.

"பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான இந்தத் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கருத்து தெரிவித்திருந்தாலும், தமிழக பாஜக இந்த விஷயத்தில் குட்டையை குழப்பியது... குறிப்பாக, இந்த தீர்ப்பு வந்தபோது, பாஜகவின் திருப்பதி நாராயணன் திமுகவிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார்..

 நாராயணா

நாராயணா

திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடத்திய மஹாராஷ்டிராவிலும் இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், மு,க.ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளை கண்டிப்பாரா? கொள்கையே பெரிது, சமூக அநீதியை காங்கிரஸும், கம்யூனிடுகளும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன என்று பொங்கி எழுவாரா ஸ்டாலின் அவர்கள்? இனி ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று அவ்விரு கட்சிகளையும் கூட்டணியிலிருந்து உதறித் தள்ளும் தைரியம் உள்ளதா ஸ்டாலின் அவர்களுக்கு? என்று கேட்டிருந்தார். இந்த கேள்வியை, திமுக எம்பி MM அப்துல்லாவிடம் நாம் எழுப்பினோம்.. ஒன் இந்தியா தமிழுக்கு அப்துல்லா தந்த ஸ்பெஷல் பேட்டி இதுதான்.. அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

 10% தீர்ப்பு

10% தீர்ப்பு

இந்த தீர்ப்பானது, திமுகவுக்கு கிடைத்த தோல்வி என்று சொல்ல மாட்டேன்.. காரணம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிகைளாக இருந்துவிட்டு, சமூக நீதி பாதையில், நூற்றாண்டுகளாக முன்னேறி கொண்டிருக்கிறோம்.. கீழ்க்கோர்ட்டில் ஒரு தீர்ப்பு வந்துவிட்டால், மேல்கோர்ட்டுக்கு நம்பிக்கையின் அடிப்படையில்தானே செல்கிறோம்.. அந்த வகையில் இந்த வழக்கு குறித்தும் முறையீடு செய்கிறோம்.. கம்யூனிஸ்ட்களுக்கு, காங்கிரசுக்கு மாற்று பார்வை இருந்தாலும், பெரும்பாலான கட்சிகளுக்கு, இந்த 10 சதவீத தீர்ப்பு குறித்து திமுகவின் பார்வையே உள்ளது..

 கம்யூனிஸ்ட்டுகள்

கம்யூனிஸ்ட்டுகள்

திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கூட்டணி முறியுமா? என்று கேட்கிறார்கள்.. தேசிய அளவில் பார்த்தால், இதே கம்யூனிஸ்ட்டும், காங்கிரசும் இந்துத்துவாவை எதிர்க்கிறார்கள்.. இந்த கொள்கையில்தான் கூட்டணி எங்களுக்குள் உள்ளது.. கம்யூனிஸ்ட்டுகளை பொறுத்தவரை வர்க்கம்தான் முக்கியம் என்பார்கள்.. அதாவது இல்லாதவன், இருப்பவன் என்று இரு பார்வை மட்டுமே அவர்களுக்கு உண்டு.. வர்க்கத்தை மட்டும் வைத்துதான், உலகத்தில் எல்லாம் நடக்கிறது என்பது கம்யூனிஸ்ட்களின் பார்வை.. ஆனால் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், மண்ணுக்கேத்த மார்க்சியமாகத்தான் இருக்க முடியும் என்கிறோம்.

ஸ்டேட்டஸ்

ஸ்டேட்டஸ்

ஏன் என்றால் அங்குள்ள சித்தாந்ததை, நம் நாட்டில் கொண்டுவர முடியாது.. இங்கே வறுமை என்பது சாதியுடன் சம்பந்தப்பட்டுள்ளது.. அந்தஸ்து என்பதும் சாதியுடன்தான் சம்பந்தப்பட்டுள்ளது.. உதாரணத்துக்கு, ரஷ்யாவில் ஒரு ஏழையும், பணக்காரரும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.. ஏதாவது ஒரு தொழில் செய்து, அந்த ஏழை பணக்காரராகிவிட்டால், அவருக்கும் அந்தஸ்து வந்துவிடும்.. ஏற்கனவே இருக்கும் பணக்காரர் வீட்டில் இவர் சம்பந்தமும் செய்து கொள்ளலாம்.. ஆனால், இங்கே அப்படி செய்ய முடியுமா?

சான்ஸஸ்

சான்ஸஸ்

என்னை மாதிரி பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருத்தருக்கு உரிமைகள், வாய்ப்புகள் என்பது குறைவு.. நான் ஒருவேளை பணக்காரனாகிவிட்டால், இன்னொரு உயர்சாதியை சேர்ந்த ஏழையுடன் நான் உறவாகிவிட முடியாது.. சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது.. இங்கேதான் திராவிட இயக்கமும் - கம்யூனிசமும் வித்தியாசப்படுகிறது. இந்த புள்ளியில் இருந்துதான் 10 சதவீத இடஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கிறோம்.. இங்கே அந்தஸ்தும், பொருளாதாரமும் சாதி அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.. அதனால் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மட்டுமே இங்கே இருக்க முடியுதமே தவிர, பொருளாதார அடிப்படையில் என்பது கொஞ்சம்கூட சாத்தியப்படாது.

 1000 SEATS

1000 SEATS

எப்போதுமே ஆர்எஸ்எஸின் திட்டம்தான் பாஜகவின் திட்டமும்.. மாநிலங்களை கலைத்துவிடவேண்டும்.. இந்தி என்பது ஒரே மொழியாக வைத்து கொள்வார்கள்.. இந்தியாவை மாவட்டங்களாக பிரித்து விட வேண்டும், ஒருமாவட்டத்துக்கு ஒரு எம்பி தொகுதி, அதாவது ஒரு மாவட்டத்துக்கு கலெக்டர் இருப்பார், ஒரு எம்பி இருப்பார்.. அவ்வளவுதான்.. மற்றபடி மாநில பொறுப்பு இவர்களிடம்தான் இருக்கும்.. இப்போது புதிதாக பார்லிமென்ட் கட்டிக் கொண்டு இருக்கிறார்களே, அதில் 1000சீட் வைத்துதான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவங்களுடைய நோக்கமே இதுதான்..

வர்றாதீங்க

வர்றாதீங்க

இங்குள்ள ஆளுநர் சரியாக செயல்படவில்லை என்பதால்தான், அவர் மீது குற்றஞ்சாட்டி வருகிறோம். அதேபோல தெலுங்கானா ஆளுநர், அவர் மாநில அரசியலை செய்ய வேண்டியதுதானே? எதுக்காக திமுக அரசை குற்றம் சொல்கிறார்? அவர் ஒன்னும் அரசியல்வாதி கிடையாதே.. ஆளுநர் மட்டும்தானே? பாண்டிச்சேரிக்கு கூடுதல் பொறுப்பு தந்திருந்தால், அதை போய் அவர் பார்க்கட்டும்.. இங்கே எதுக்கு வர்றாங்க? விமர்சனம் செய்தால், பதில் விமர்சனத்தை நாங்களும் முன்வைப்போம். கருத்து சொல்லட்டும் யார் வேண்டாம் என்பது? ஆனல், ஒரு பொறுப்புக்குள் உட்கார்ந்துவிட்டால், தனி நபராக விமர்சனம் செய்ய முடியாது.. ஆளுநர் என்ற பொறுப்பை உணர்ந்து தான் செயல் பட வேண்டும்..

 பாடி லேங்குவேஜ்

பாடி லேங்குவேஜ்

எனக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு.. ஆனால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், இப்படி கருத்து சொல்ல வேண்டி உள்ளது.. ஒருவேளை நான் எம்பியாக இல்லாவிட்டால், என் மொழியே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.. என் பாடி-லேங்குவேஜ்ஜும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.. இதை தமிழிசையும் உணர வேண்டும்.. காரணம் அது தமிழிசையின் வார்த்தை கிடையாது.. அது ஆளுநரின் வார்த்தையாக கருதப்படும்.. கவர்னர்கள் அரசியல் செய்யக்கூடாது என்று அரசியல் அமைப்பு சட்டத்திலேயே, தெளிவாக சொல்லப்பட்டுள்ளதே.. முதல்ல, ஆளுநர் என்பவரே தேவையில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு..

 4 சீட்

4 சீட்

பாஜக இங்கே வளர்ந்துவிட்டதை போல மாயத்தை ஏற்படுத்துகிறார்கள்.. இங்கே சுத்தமாக வளரவில்லை.. 4 சீட் இங்கே வெற்றி பெற்றதுகூட அதிமுக தயவால்தானே.. தனித்து ஒன்றும் வெற்றி பெறவில்லையே.. பாஜக நிஜமாகவே வளர்ந்துவிட்டார்கள் என்றால், தனித்து போட்டியிட சொல்லுங்களேன்.. முதல்ல எல்லா இடத்திலும் டெபாசிட் வாங்க சொல்லுங்க.. அவங்க வளர்ந்துவிட்டார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.. 2014 தேர்தலில் தனித்து நின்றோமே.. டெபாசிட்டை வாங்கினோமே.. அதனால், வளர்ச்சி என்பது உண்மையானால், கூட்டணியின்றி தனித்து போட்டியிடட்டும் பாஜக" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+